King and his Palace Officers in Tamil Story
அரசனும் அதிகாரிகளும் - சிறுகதை
அரசனே எதையும் நேரடியாக செய்யவோ கட்டுப்படுத்தவோ ஆராயவோ அமல்படுத்தவோ இயலாது. அதனாலேயே அதிகாரிகளை நியமித்து கொள்கிறான்.
அந்த அதிகாரிகள் தவறிழைக்கலாம். அல்லது கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம். அவர்களை சமாளித்து எப்படி தவறு செய்தால் தண்டிப்பது என்று இக் கதையில் கூறப்படுகிறது.
அதிக காலத்திற்கு முன் கோசல நாட்டில் சேமதர்சி என்ற மன்னனின் ஆட்சி நடந்து வந்தது. கையில் இருந்த கூண்டு ஒன்றில் ஒரு காக்கையை வைத்துக் கொண்டு இயங்கும் திரிந்த கலக விருட்சிய முனிவர் கோசல நாட்டிற்கு மன்னனைக் காண தேடி வந்தார்.
அந்த முனிவர் தமது கூண்டில் இருந்த காகத்திற்கு மூன்று காலமும் உணர்ந்தும் கூறும் சக்தி உண்டு என்று கூறி வந்தார். அந்த காக்கையின் மொழியும் அவருக்கு தெரியும் என்றார்.
அதனாலேயே அவர் அந்தக் காக்கை உடனே எங்கும் திரிந்தார். அந்த காகத்தின் மூலம் நாட்டு நடப்பு, அதிகாரிகளின் போக்கு அனைத்தும் அவர் அறிந்து கொண்டு வந்தார்.
அவர் அரசனிடம் போன போது அதிகாரிகள் பலரும் அவரை சுற்றி அமர்ந்து இருக்க கண்டார். அதில் ஒரு அதிகாரி மிக மிக ஆடம்பரமாக ஆடை ஆபரணங்கள் அணிந்து காணப்பட்டான்.
அவனை பார்த்து முனிவர், நீ அரசனுடைய காஜனா பொருளை களவாடி அனுபவிக்கிறாய், உனக்கு அந்த வேலையில் இருவர் உதவியாக இருந்திருக்கின்றனர். இவ்வாறு இந்த காக்கை கூறுகிறது என்றார்.
அரசன் விசாரித்தான், அது உண்மைதான் என்று தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் முனிவர் தூங்கும் போது அவருடைய காக்கையை கொன்றுவிட்டனர்.
விடிந்ததும் காக்கை அம்பால் குத்தப்பட்டு இறந்து கிடந்ததை முனிவர் பார்த்தார். மன்னனிடம் போய் புகார் செய்தார்.
"மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பது அரசனுடைய கடமை. உனது நலம் கருதி அந்த அதிகாரிகளின் தவறை அறிந்து உன்னிடம் கூறினேன். ஆனால் எனக்கு அபயம் அளித்து காக்கவேண்டிய நீ நான் கூறுவதை அமைதியாகக் கேள். அதிகாரிகளைப் பற்றி அவர்களால் உனக்கு வரப் போகும் தீமைகளை அறிந்து கூறினேன். அதனால் உன் அதிகாரிகள் எனது காகத்தை கொன்றுவிட்டனர். பெரிய மரம் ஆயினும் அதை தொடர்ந்து தழுவி வளரும் கொடி அதையே முழுவதும் மூடி மறைத்து விடுவதை போல, காற்றில் பற்றும் தீயால் கொடி தானும் அழிந்து படர்ந்த மரத்தையும் எரிந்தழியச் செய்வது போல உன்னுடைய அதிகாரிகள் உனக்கு கீழே இருந்து கொண்டே தாமும் கெட்டு உன்னையும் கெட்டழியச் செய்து விடுவர்" என்றார்.
No comments:
Post a Comment