சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் “எது ரயிலை ஓடச் செய்கிறது?” - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Saturday, May 8, 2021

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் “எது ரயிலை ஓடச் செய்கிறது?”

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் “எது ரயிலை ஓடச் செய்கிறது?” 


1. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்... 

ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (1781 - 1848) நீராவி இன்ஜினைக் கண்டு பிடித்தவர். ஒரு சமயம், ஸ்டீஃபன்சனும் புவியமைப்பியல் துறை சார்ந்த அவரது நண்பரான பெக்லாண்டும் (Beckland) ஒரு புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது, தூரத்தில் ஒரு ரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி ஸ்டீஃபன்சன், “எது ரயிலை ஓடச் செய்கிறது?” என்று பெக்லாண்டைப் பார்த்துக் கேட்டார். 

அதற்கு அவர், "நீ கண்டுபிடித்த அற்புதமான நீராவி இன்ஜினால் ஆன ரயில் வண்டியில் உள்ள ஓட்டுநரின் கைகள்' என்று வேடிக்கையாகக் கூறினார். 

"தப்பு” என்றார் ஸ்டீஃபன்சன். 'அப்படியென்றால் அந்த இன்ஜினை இயங்கச் செய்யும் நீராவி ..." 

"அதுவும் தப்பு" 

"அப்படியென்றால் கொதிகலனுக்கு அடியில் எரியும் நெருப்பு." 

"மீண்டும் தப்பு” என்று சொல்லி விட்டு ஸ்டீஃபன்சனே தொடர்ந்தார்: 

"சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த நிலக்கரியை ஓட்டுநர் உலையில் அள்ளிப்போட, நீராவியால் வண்டி ஓடுகிறது. ஆனால், நிலக்கரியோ மண்ணில் புதைந்த மரங்களால் உருவாகிறது. மரங்களோ சூரியன் ஒளி தந்ததால் வளர்ந்தன. எனவே, ரயில் வண்டி ஓடுவதற்கு உண்மையான காரணம் சூரியனே” என்று கூறினார். 

No comments:

Post a Comment