Ticker

6/recent/ticker-posts

40 வயதிலும் 20 போல் இருக்க வேண்டுமா இதோ சில குறிப்புகள்

 


முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாக வும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள கண்டிப் முடியும். பொதுவாகவே திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்களைக் கவனித்துக் கொள்வ தில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குடும்பம், வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக் குள் அடைத்துக்கொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். 


இன்றைக்கு நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன் மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக சில டிப்ஸ்.... 

1. மன நிலை 

முக்கியம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான, அமைதியான மன நிலை அவசியம். இந்த உலகில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதி தாக ஏதும் பிரச்சினை வந்தால், 'அட, நான் பார்க்கா ததா?' என்று நினைத்துக்கொண்டு, திடமாக அவற் றைக் கடக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவைத் தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சி யானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள் ளுங்கள். 

2. உடல் மேல் கவனம் 

நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான். ஆகவே, உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே, முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம். வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். நிம்மதியான தூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடையச் செய்யும். உடற் பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையைத் தக்க வைக்க உதவும். 

3.பொழுதுபோக்கு டி.வி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது வேறு ஏதாவது ஒன்றை உங்களுக்கு பிடித்த தாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மன நிலையின் மாற்றத்தை...! 

4. ஆரோக்கிய உணவு 

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு, உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவ சியம். வீணாகப் போகிறது என்பதற்காக வயிற்றுக் குள் கொட்டினால், வீணாவது உங்கள் உடல்தான் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும். 

5. நல்ல நட்பு 

எப்போதுமே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மைப் பாதிக்கும். அதனால் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது. நல்ல நண்பர்களே உங்களுக்குப் பெரிய ஊக்க சக்தி. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது நம் மனநிலை. வயதாகிவிட்டது என்ற மன நிலையை தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் எப்போதும் 20 தான்.


Post a Comment

0 Comments