திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (03.08.2021) - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, August 3, 2021

திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (03.08.2021)

 திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் நகஎ, 4767/04/2021, நாள்


.03.08.2021 

பொருள்

EMIS - திருவண்ணாமலை மாவட்டம் அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலை/ உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை - பள்ளித் தலைமையாசிரியர் - TN- EMIS mobile app இல் காலை 10.00 மணிக்குள் பதிவு செய்யத் தெரிவித்தல் தொடர்பாக, 

பார்வை. 

சென்னை-6, பள்ளிக் கல்வி ஆணையரகத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டுதல் 

பார்வையில் காணும் வழிகாட்டுதலின் அடிப்படையில் , அனைத்து அரசு, அரசு நிதியுதவி சார்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. 

கடந்த 02.082021 முதல் தினந்தோறும் வருகை புரியும் ஆசிரியர்களின் வருகையை TN- EMIS mobile app இல் காலை 10.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது 

மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கண்டவாறு அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையினை தினந்தோறும் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களால் பதிவு செய்யப்படுகிறதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறும், இப்பணிக்கு வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

முதன்மைக் கல்வி அலுவலர்,
திருவண்ணாமலை.  

பெறுநர் 

அனைத்து அரசு, அரசு நிதியுதவி சார்ந்த தொடக்க / நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், திருவண்ணாமலை வருவாய் மாவட்டம், 

நகல்- 

01.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். 

02. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் 03. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள். 

No comments:

Post a Comment