GUINDY ITI ADMISSION - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, August 24, 2021

GUINDY ITI ADMISSION

 கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 15.09.2021வரை நேரடி மாணவர் சேர்க்கை 



தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி, கிண்டி மகளிர், திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இது குறித்து சென்னை, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

2021-ஆம் ஆண்டிற்குகிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 24.08.2021 முதல் 15.09.2021வரை (Spot admission) நடைபெற்று வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம். ச

கிண்டி,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்று சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், பெரிய வேலை அளிக்கும் (Top Level) மற்றும் முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். ரூ.750/- மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற் பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் 044- 22501350,9499055649 இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment