NMMS KYC UPDATION-REGARDING - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, August 23, 2021

NMMS KYC UPDATION-REGARDING

 //மின்னஞ்சல் மூலம்// தருமபுரி, முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் நக.எண்.6058/«2/2020 நாள்.23.08.2021 


பொருள் 

பள்ளிக் கல்வி NMMS கல்வி உதவித்தொகை திட்டம் NSP இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவு செய்து- KYC படிவத்தை பூர்த்தி செய்தல் - சார்ந்து 

பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(NSS) செயல்முறைகள் , சென்னை- 06ந.க.எண்.031551/எம்/இ4/2021 நாள்.17.08.2021. 

பார்வை 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று, தெரிவுசெய்யப்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு NMMS கல்வி உதவிக்தொகை மத்திய கல்வி அமைச்சகத்ததால் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் (DBT) வரவு வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து தலைமையாசிரியர்கள்(INO) தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் உள்ளீடு செய்து, KYC படிவத்தை பூர்த்தி செய்யுமாறு பார்வையிற் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்த்தில் 23.08.2021 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து, KYC படிவத்தை பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமையாசிரியர் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியை அனைத்து தலைமையாசிரியர்களும் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் பதிவேற்றம் செய்வது தொடர்பாக சந்தேகம் ஏதும் ஏற்படின் கீழ் கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். 




No comments:

Post a Comment