Benefits of bathing in rivers நதிகளில் நீராடுவதன் நன்மைகள் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, September 19, 2021

Benefits of bathing in rivers நதிகளில் நீராடுவதன் நன்மைகள்

 



சலசலவென ஓடும் நதிநீரில் நீராடுவதில் கிடைக்கும் சுகமே அலாதியானது நதி நீர் குளியல் மன ரீதியாக மட்டுமில்லாமல், உடல் ரீதியாக அதிக நன்மைகளைத் தருகிறது. அதில் சில.... 

நுரையீரல் செயல்பாட்டை சீராக்குகிறது 

நதி நீரில் மூழ்கி குளிக்கும்போது நம்மை அறியாமலே மூச்சை நன்றாக இழுத்து வெளியிடுவோம். இது சிறந்த மூச்சுப் பயிற்சியாக விளங்குகிறது. இவ்வாறு தொடர்ந்து செய்யும் மூச்சுப்பயிற்சி நுரையீரலின் செயல் பாடு சீராக நடைபெற உதவுகிறது. 

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது 

குளிர்ச்சியான நதி நீரில் நீராடும் போது பீட்டா- எண்டோர்பின்ஸ் மற்றும் நார் அட்ரிரெனலின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அழுத் தத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான நிலையை உருவாக்குகின்றன. 

தொற்று நோய்களைத் தடுக்கிறது. 

நதி நீரில் மூழ்கி குளிக்கும்போது, உடலில் உள்ள நிணநீர் நாளங்கள் சுருங்குகிறது. இது நிணநீர் மண்டலங்களைத் தூண்டி உடல் முழுவதும் திரவங்களை கொண்டு செல்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்து, தொற்று நோய்கள் நம்மைத் தாக்காதவாறு பாதுகாக்கிறது. 

வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துகிறது 

நதிகளில் இருக்கும் நீரானது ஒரே இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கக்கூடியது. இவ்வாறு ஓடி வரும் நீரில் பற்பல மூலிகைச் செடி கொடிகளும் அடித்துக்கொண்டு வரும்போது, அவற்றின் மூலிகை குணங்கள் நீரோடு கலக்கின்றது. அந்த நீரில் குளிக்கும் போது, உடலில் உள்ள வீக்கங்கள் குறையும்; வலி நிவாரணம் கிடைக்கும். இது மட்டுமில்லாமல் கோபம், எரிச்சல், மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளும் நதியில் நீராடுவதால் மறைந்து போகும்.

நதிகளின் குளிர்ந்த நீரில் நீராடும்போது ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். உடலும், மனமும் சுறு சுறுப்பாக இயங்கும். நரம்பு மண்டலம் புத்துணர் வோடு செயல்படும். செல்கள் அதிக பிராண வாயு வைப்பெறும். இதன் மூலம் முகம் பொலிவடையும். இதனை முன்வைத்தே முன்னோர்கள், நதியில் நீராடுவதை புண்ணிய தீர்த்த சடங்காக ஏற்படுத்தி னார்கள். நதிகளில் நீராடினால் பாவங்கள் கரைந்து புண்ணியம் பெருகும் என்ற ஆன்மிக விதையை வேரூன்றி இருக்கின்றனர். நதிகளில் நீராடும்போது, எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, புத்துணர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment