அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, September 27, 2021

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எண். 208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை 600 106 தொலைபேசி எண்: 2363 5011 நிகரி: 2363 8282 மின்னஞ்சல் - tnsec.tn@nic.in இணையதளம் - www.tnsec.tn.nic.in செய்தி வெளியீடு செய்தி வெளியீடு :30/2021 நாள்: 27.09.2021 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2021 அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணைகள் வெளியிட்டுள்ளது. 

* தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது. 

* யாதொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்து மூலமான முன் அனுமதி பெறவேண்டும், 

* மேலும் ஒலிபெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

* மேற்சொன்னவாறு வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படு அனைத்து ஒலிபெருக்கிகளும், 


No comments:

Post a Comment