1.8.2021 அன்றைய நிலவரப்படி எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் | முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் | செயல்முறைகள் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, October 28, 2021

1.8.2021 அன்றைய நிலவரப்படி எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் | முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் | செயல்முறைகள்

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை-600006. ந.க.எண் 039965/டபிள்யு2/இ3/2021, நாள் 25.10.2021. 


பொருள் 

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (முதுகலை ஆசிரியர்) மேற்கொள்ள ஏதுவாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் சார்ந்து. 

பார்வை 

அரசாணை எண் 525, பள்ளிக்கல்வி (டி1) துறை நாள் 29.12.1997. 

2. அரசாணை எண் 231, பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010. 3.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.இதே எண் நாள் 05.08.2021. 


01.08.2021 நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்கள் மற்றும் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாகவும், மொழி வாரியாகவும், பாட வாரியாகவும் சார்பான முழு விவரங்களையும் (Teacher Profile) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் 06.08.2021க்குள் பதிவேற்றம் செய்யக் கோரி பார்வை 3ல் காண் செயல்முறைகளில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. 

அவ்வாறு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பின் இத்துடன் இணைக்கப்பட்டு இணைப்பில் உள்ள கலங்களைப் பூர்த்தி செய்து 26.10.2021 அன்று தவறாது அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி) d பெறுநர் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் மூலமாக) நகல் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS), சென்னை-6, தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
No comments:

Post a Comment