அனுப்புநர்
பெறுநர்
திரு.சா.சேதுராம வர்மா
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.
பெறுநர்
செய்தி ஆசிரியர்,
அனைத்து செய்தி ஊடகங்கள்.
ந.க.எண்.018653 /NTSE/2021
நாள் : 10.11.2021
ஐயா/அம்மையீர்,
பொருள் :
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6
தேசிய திறனாய்வுத் தேர்வு, ஜனவரி 2022 – பள்ளி
மாணவர்கள் விண்ணப்பிக்க கோருதல் - சார்பு.
இவ்வலுவலக இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு
நாள்: 30.10.2021.
பார்வை :
பார்வையில் காணும் செய்திக்குறிப்பில் நடைபெறவுள்ள ஜனவரி 2022
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள்
விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம்
08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்
தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியினை பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக
வெளியிடுமாறும் வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கனிவுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
“இது விளம்பரம் அல்ல” எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம்/-
இயக்குநர்
No comments:
Post a Comment