பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க ரூ.71.10 கோடி - Thulirkalviseithi.com

Latest

Saturday, November 27, 2021

பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க ரூ.71.10 கோடி

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க, 71.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 505 ரூபாய் செலவில், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 1,088.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கப்பட உள்ளது. அதை கொள்முதல் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில், 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க, 71 கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 980 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் முகமது நசிமுதீன் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment