ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!!! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, November 10, 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!!!

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்.449/c7/SS/ 2021 நாள் 10.11.2021 


பொருள் : 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல் - வழிகாட்டுதல்கள் - சார்பு. 

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளிமற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 11 மணிநேரம் (மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் "இல்லம் தேடிக் கல்வி" செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி நேரங்களைத் தவிர, மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இத்திட்டம் முழுவதும் தன்னார்வத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். விழிப்புணர்வு நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு திறந்த அழைப்பை வழங்கும். தன்னார்வலர் தேர்ச்சியானது, தன்னார்வர் கொடுத்த தரவுகளை சரிபார்த்தல், பின்புல ஆய்வு, கல்வியில் முன் அனுபவம், குழந்தைகளை கையாளும் திறன், தன்னார்வலர் நேரடி சந்திப்பு மற்றும் கற்றல்- கற்பித்தல் பயிற்சிக்கு தயார் நிலை அறிதல் ஆகியவற்றின் மூலம் நடைபெறும். தன்னார்வலரைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நிலைகளையும் எளிதாக்கும் பொருட்டு "இல்லம் தேடிக் கல்வி" இணையதளம் (http://illamthedikalvi.tnschools.gov.in/) மற்றும் இணையவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளி-மாணவர்- தன்னார்வலர்-கிராம தொடர்பு தடையின்றி நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் (மாநில, மாவட்ட, பள்ளி அளவில்), உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் முறை 

மாநில அளவில் : மாநில அளவில் தன்னார்வலர்களின் பதிவு நடைபெற்று வருகிறது. Web Portal மூலம் தன்னார்வலர்கள் பதிவு செய்கின்றார்கள். இல்லம் தேடிக் கல்வி வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் தரவுகள், கிராம / குடியிருப்புவாரியாக மாநில அளவில் பெறப்பட்டுள்ளது. மாநில அளவில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல்: பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களின் தகவல்கள், சரிபார்க்கப்பட்டு (பெண்களுக்கு முன்னுரிமை, கல்வித்தகுதி, முகவரி, இதர தகவல்கள்) மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு (CEO) அனுப்பி வைக்கப்படும். மாவட்ட அளவில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல்: மாநிலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் மாவட்ட குழுவின் மூலம், பள்ளிவாரியாக பிரிக்கப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும். இந்த தகவல் ஒன்றிய அளவிலான குழுக்களுக்கும் தெரிவிக்கப்படும். ஒன்றிய அளவிலான குழுக்களுக்கு தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல் பற்றிய வழிமுறைகளை விளக்குதல் மற்றும் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தலை கண்காணிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பொறுப்புகள் குறித்து ஒன்றிய குழுக்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். . பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்புகள் மாவட்ட குழுவின் வாயிலாக பெறப்பட்ட தரவுகளை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கிராம குடியிருப்புக்கு நேரடியாக சென்று தன்னார்வலர்களின் தகவல்களை சரிபார்த்தல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது குடியிருப்புக்குட்பட்ட பிறபள்ளிகளுடன் இணைந்து செயல்படுதல் அவசியமாகும். (ஒரே பகுதியில் இருந்து நிறைய பள்ளிகளில் குழந்தைகள் பயில வாய்ப்புள்ளதால்) தன்னார்வலர்களை தேர்தெடுத்தலில் கீழ்க்காணும் வரையறைகளை சரிபார்த்தல் அவசியமாகும், * இல்லம் தேடிக் கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியை சார்ந்தவராக இருத்தல். 2


 கல்வித் தகுதி 

• 1 முதல் 5ம் வகுப்பு மாணவர் குழுவிற்கு - கல்வித் தகுதி - +2 • 6 முதல் 8ம் வகுப்பு மாணவர் குழுவிற்கு-கல்வித் தகுதி - பட்டப்படிப்பு - கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தல், கல்வி முன் அனுபவம், தன்னார்வலர்களை முன்னிலைப்படுத்தும் பிற சான்றிதழ்கள் (Co- curricular, experience) சரிபார்த்தல். புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றல் செய்ய வேண்டும். 

* தன்னார்வலர்கள் தேர்தெடுக்கும் போது பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். 

* பின்புலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தல். 

* தன்னார்வலர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். * மையத்திற்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம் எனப் பாகுபடுத்தாமல், விருப்பு வெறுப்பின்றி சமமாக கருதுபவராக இருக்க வேண்டும். TNEMIS - அளித்துள்ள செயலி வாயிலாக, தலைமை ஆசிரியர் Login ID மூலம் செயலிக்குள் சென்று மேலே பெறப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தன்னார்வலருக்கும் பள்ளி மேலாண்மைகுழு தங்கள் பரிந்துரையை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகளை முடித்த பின்னர் ஒன்றிய குழுவிற்கு (BEO/BDO) தெரியப்படுத்த வேண்டும். ஒன்றிய அளவில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தல்: பள்ளி மேலாண்மைக்குழு தேர்ந்தெடுத்த தன்னார்வலர்கள் அடுத்த சுற்று தேர்ச்சிக்கு ஒன்றிய அளவில் அழைக்கப்பட வேண்டும். இந்த தேர்ச்சி ஒன்றியத்தில் Hi-Tech Lab வசதியுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நடைபெறும். எந்தப் பள்ளியில் நடைபெறும் என்பதை ஒன்றியக் குழு தீர்மானிக்கலாம். 

1. குழந்தைகளைக் கையாளும் திறன் அறியும் தேர்வு : 1. உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labல் உள்ள கணினி மூலம் இணைய வழியாக தேர்வுகள் நடைபெறும். தேர்வு நடைபெறும் பொழுது Hi-Tech Lab-க்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது. . 

2. குழு விவாதம்: 

குழந்தைகளைக் கையாளும் திறன் அறியும் தேர்வு முடிந்தவுடன் தன்னார்வலர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தலைப்பின்கீழ், ஒன்றிய குழு முன்னிலையில் தன்னார்வலர்கள் மத்தியில் குழு விவாதம் நடத்தப்பட வேண்டும். 1. குழு விவாதத்திற்காக தலைப்புகளும் வழிகாட்டுதலும் மாநில அளவில் இருந்து பகிரப்படும். li. தன்னார்வலர்கள் பேசும் திறன், விவாதிக்கும் திறன், அவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிய குழு தேர்ந்தெடுக்க வேண்டும். 

iii. பரிந்துரைக்கப்பட்ட தன்னார்வலர்களின் பெயர் மற்றும் விபரங்களை மாவட்ட அளவிலான குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவில் இதுவரையில் பெறப்பட்ட, சரிபார்க்கப்பட்ட தகவல்கள், தேர்வு மதிப்பெண்கள், குழு விவாத பங்களிப்பு விவரங்கள், பள்ளி மேலாண்மைக் குழுவின் பரிந்துரை மற்றும் பின்புல தகவல்களின் அடிப்படையிலும் மையத்தின் தேவைக்கு ஏற்றவாறு தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தலை உறுதி செய்ய வேண்டும். தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டியவை கொடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தல் நடைபெற்றுள்ளதா என சரிபார்த்து தன்னார்வலர்களின் இறுதிப் பட்டியலுக்கு மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். 

இறுதி பட்டியலை மாவட்ட அளவிலான குழு ஒன்றிய அளவிலான குழுவின் மூலமாக பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். ஒன்றிய அளவிலான குழுவாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுத்த தன்னார்வலர்களை கிராம / குடியிருப்பு இல்லம் தேடிக் கல்வி மையங்களுடன் இணைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான குழு அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். (மாநிலத்திலிருந்து பெறப்பட்ட படிவத்தின்படி) மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் பள்ளிமேலாண்மைக் குழு வாயிலாக பெறப்படுதல் வேண்டும். .தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை மையத்துடன் இணைத்துள்ள முழு விவரங்களை செயலி வழியாக பள்ளி மேலாண்மைக் குழு பதிவு செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு பதிவு செய்த விவரங்களை ஒன்றிய குழுக்கள் மற்றும் மாவட்ட குழு சரிபார்க்க வேண்டும். மாவட்டக் குழு தலைவரின் ஒப்புதலுடன் மாநில குழுவிற்கு தெரியப்படுத்துதல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அவர்கள் இணைக்கப்பட்ட மையம், மையம் அமைந்துள்ள இடம் ஆகியவை பள்ளி மேலாண்மைக் குழு வழியாக தெரிவிக்கப்பட வேண்டும். தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தலின் போது பெறப்படும் அனைத்து மாநில தரவு மையத்திற்கு (EMIS) தெரியப்படுத்துதல் வேண்டும். (பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆய்வு, தேர்வு, குழுவிவாத குறிப்புகள், பயிற்சியாளரின் குறிப்புகள் உட்பட) 

பயிற்சி . . 

தன்னார்வலர்கள் அனைவருக்கும் குழந்தைகளைக் கையாளும் விதம் குறித்து ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும். • பயிற்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் பங்குபெறும் விதமாக தன்னார்வலர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கான தேதி, இடம் ஆகியவைக் குறித்து பள்ளிகள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். பயிற்சியின் பொழுது தன்னார்வலர் குழந்தைகளை சரிவர கையாளும் திறன் உள்ளவரா என்பதை பயிற்சியாளர் உறுதிசெய்ய வேண்டும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் (மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவில்), உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார். . 

குறிப்பு : 

தன்னார்வலர்கள் தேர்வில் சிறப்பு கவனம் தேவையெனில் பகுதிக்கு ஏற்ப மாவட்ட குழு வழிகாட்டும். 

No comments:

Post a Comment