ஸ்கேட்டிங் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, November 14, 2021

ஸ்கேட்டிங் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்

ஸ்கேட்டிங் விளையாட்டை சில மணி நேரங்களில் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதையும் எளிதாக கற்கலாம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஸ்கேட்டிங் வேடிக்கையான, பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு ஆகும். ஸ்கேட்டிங் செய்பவர்கள் சக்கரங்கள் கொண்ட காலணிகள் அல்லது பூட்ஸை அணிந்து நடைபாதைகள் மற்றும் பிற பகுதிகளில் சறுக்கியபடி செல்வார்கள். 

குழந்தைகள் இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மற்ற விளையாட்டுகளைப் போலவே, ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலமும் குழந்தைகளுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன. மூளையின் ஆற்றலை அதிகரிப்பது முதல் சமூக திறன்களை மேம்படுத்துவது வரை குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேட்டிங் உதவுகிறது. மூளையின் செயல்பாடு குழந்தைகள் சறுக்கி விளையாடும்போது வேகமாகவும், கட்டுப்பாடோடும் செயல்படுவார்கள். 

இது உடலுக்கு மட்டுமில்லாமல், மூளையின் செயல்பாட்டுக்கும் பயிற்சியாக அமையும். இதன் மூலம் வகுப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள். மன அழுத்தம் குறைதல் மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும். சமூக திறன்களை மேம்படுத்துதல் ஸ்கேட்டிங் வளையத்துக்குள் சறுக்கி விளையாடும்போது மற்ற பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். 

இதன் மூலம் சமூகத்தில் தயக்கமின்றி பழகும் குணத்தை பெற முடியும். மற்றவர்களை எளிதாக நண்பர்களாக மாற்றிக்கொள்ள முடியும். தன்னம்பிக்கை அதிகரித்தல் சில விளையாட்டுக்களைக் கற்றுத் தேர்வதற்கு கால தாமதம் ஆகக்கூடும். ஸ்கேட்டிங் விளையாட்டை சில மணி நேரங்களில் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதையும் எளிதாக கற்கலாம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்

No comments:

Post a Comment