புயலாக மாறுது காற்றழுத்த தாழ்வு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, November 30, 2021

புயலாக மாறுது காற்றழுத்த தாழ்வு

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment