மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கி பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி (Suggestion Box) வைக்க வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!! - Thulirkalviseithi.com

Latest

Tuesday, November 16, 2021

மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கி பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி (Suggestion Box) வைக்க வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

 வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.3235/ஆ1/2021, நாள் 15.11.2021 


பொருள் : 

பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்ட அனைத்துவகை - பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நன்னெறி போதனை வழங்கி ஒவ்வொரு பள்ளியிலும்- ஆலோசனை பெட்டி (Suggestion Box) வைத்து - உரிய நடவடிக்கை மேற்கொள்ள - தலைமையாசிரியர்களை - கேட்டுக்கொள்ளுதல் - சார்பு, 

1) சென்னை, மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2791/01/2020-6 நாள் 01.10.2021 2) சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.111701/எம்/இ1/2012 நான் .11.2012 

பார்வை : 

மேற்காண் பொருள் சார்பாக, பார்வையில் காண்டுள்ள செயல்முறைகளின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்துவகை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, நன்னெறி போதனைகள் வழங்கும் பொருட்டு, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப்பெட்டி (Suggestion Box) ஒன்று வைத்து, மாணவ/மாணவிகள், தங்களின் குறை / நிறைகளையும், மற்றும் பிரச்சினைகளையும் தெரிவிக்க, மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறையை, அனைத்துவகை, மாணவ/மாணவியர்களை, தவறாது பின்பற்ற செய்ய வேண்டும். வேலூர் மாவட்ட அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடவடிக்கை என் மேலும், நடவடிக்கை விவரத்தினை பள்ளி தலைமையாசிரியர்கள் அறிக்கையாக தொகுத்து, அவ்வறிக்கை மற்றும் ஆலோசனை பெட்டியின் சாவிகளை வேலூர், மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்! தாளாளர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர், 

பெறுநர் 

தலைமையாசிரியர்கள் தாளாளர்கள் முதல்வர்கள், நடுநிலை/உயர்/மேல்நிலை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம் 

நகல் 

1) வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கு (சாவியினை பெற்றுக்கொள்ளுமாறும் மற்றும் அறிக்கையினை மட்டும் தொகுத்து வழங்கும் பொருட்டு) 2) வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) 3) அலுவலக கோப்பிற்கு

No comments:

Post a Comment