ஏராளமான அரசு பள்ளி கட்டப்படும்: வீரமரணம் அடையும் வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: கெஜ்ரிவால் வாக்குறுதி - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

ஏராளமான அரசு பள்ளி கட்டப்படும்: வீரமரணம் அடையும் வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: கெஜ்ரிவால் வாக்குறுதி

ஏராளமான அரசு பள்ளி கட்டப்படும்: வீரமரணம் அடையும் வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: கெஜ்ரிவால் வாக்குறுதிபஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், ஏராளமான அரசு பள்ளிகள் கட்டப்படும் எனவும், எல்லையில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். பஞ்சாப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டில்லியில் ஆட்சி அமைத்து வரும் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப்பில் அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,2) நடந்த பிரசாரத்தில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பேசியதாவது: இந்திய ராணுவத்தில் குர்தாஸ்பூர் மற்றும் பதன்கோட் பகுதியில் தான் அதிகளவு பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர். அதேபோல், போர்களில் அதிக வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் இந்த இரு பகுதியில் தான். ராணுவ வீரர்களின் மண்ணில் இருப்பது பாக்கியமாக கருதுகிறேன்.கடந்த ஆண்டு மெலனியா டிரம்ப் டில்லி வந்திருந்தபோது, டில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட விரும்பினார். டில்லி அரசு பள்ளிகள் அமெரிக்காவிலும் பிரபலமாக உள்ளன. பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, லண்டனில் இருந்தும் மக்கள் பஞ்சாப்பில் உள்ள அரசு பள்ளிகளை பார்க்க வருவர். நான் உங்களிடம் இரு வாக்குறுதிகளை அளிக்கிறேன். ஆம்ஆத்மி ஆட்சி அமைத்ததும், பஞ்சாப்பில் அதிகளவு அரசுப் பள்ளிகள் கட்டப்படும். டில்லியை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவது போல், பஞ்சாப் ராணுவத்தினர் எல்லையில் வீரமரணம் அடைந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment