திரும்பவும் முதல்ல இருந்தா?: 3 மாவட்டங்களில் டிச.,4 முதல் கனமழைக்கு வாய்ப்பு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

திரும்பவும் முதல்ல இருந்தா?: 3 மாவட்டங்களில் டிச.,4 முதல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் டிச., 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இன்று (டிச.,2ம் தேதி): தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை 3ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவரும் 4ம் தேதி: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். வரும் 5ம் தேதி: நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: ஈரோடு 6 செ.மீ., ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 5 செ.மீ., ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி) தலா 4 செ.மீ., சோத்துப்பாறை (தேனி), பார்லியார் (நீலகிரி) தலா 3 செ.மீ., ஆண்டிப்பட்டி (மதுரை), பேராவூரணி (தஞ்சாவூர்), மணல்மேல்குடி, விராலிமலை, குடுமியான்மலை (புதுக்கோட்டை), குன்னுார் பிடோ (நீலகிரி), போடிநாயக்கனுார் (தேனி), காரைக்குடி (சிவகங்கை), சூரங்குடி, நாகப்பட்டினம் (துாத்துக்குடி) தலா 2 செ.மீ.,

No comments:

Post a Comment