குறைபாடுடன் தன்னை பிறக்க விட்டதற்காக இளம்பெண் வழக்கு: இழப்பீடு தர உத்தரவு! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

குறைபாடுடன் தன்னை பிறக்க விட்டதற்காக இளம்பெண் வழக்கு: இழப்பீடு தர உத்தரவு!

கருவில் இருக்கும் போதே முதுகுத் தண்டு வளர்ச்சி குறைவுள்ள தன்னை பிறக்க விட்டதற்காக மருத்துவரிடம் லட்சக்கணக்கில் இழப்பீடு கோரி இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்நாட்டு உயர் நீதிமன்றம் அவர் இழப்பீடு பெற தகுதியானவர் என முக்கிய தீர்ப்பளித்தது.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் ஈவி டூம்ப்ஸ். 


இவருக்கு கருவிலேயே முதுகுத் தண்டு வளர்ச்சி குறைபாடு இருந்துள்ளது. அதனோடே அவர் பிறந்தார். இந்த குறைபாடு அவரது உடல் பேலன்ஸை பாதிக்கிறது. மேலும் ஈவியின் சிறுநீர் பை செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் அவர் சிறுநீர்பை நிரம்பியதும் அதற்கான நீக்கக் குழாயை பயன்படுத்த வேண்டும். டியூப்களுடனேயே 24 மணி நேரமும் இருக்க வேண்டும். இவ்வளவு சிக்கல்களுக்கு இடையிலும் அவர் தன்னை குதிரையேற்ற வீராங்கணையாக வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் தனது தாயார் கர்ப்பிணியாக இருந்த போது சிகிச்சை பெற்ற மருத்துவர் பிலிப் மிட்செல் மீது கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். அதில் ஸ்பீன பிபிடா (spina bifida) எனும் முதுகுத் தண்டு வளர்ச்சி குறைபாடு குழந்தையை பாதிக்காமல் இருக்க போலிக் ஆசிட் மருந்துகள் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் தனது தாயிடம் கூறியிருந்தால் அவள் கர்ப்பமாவதை தள்ளிப் போட்டிருப்பாள். நான் குறைபாடுடன் பிறந்திருக்க மாட்டேன் என கூறியிருந்தார்.இதனை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி, ஈவியின் தாய்க்கு சரியான ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால், அவர் கருத்தரிப்பதற்கான முயற்சிகளை தாமதப்படுத்தியிருப்பார். அதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கும். அவர் இழப்பீடு பெற தகுதியானவர் என்றார். இழப்பீடுத் தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை. ஆனால் அது லட்சக்கணக்கில் பெரும் தொகையாக இருக்கும் என ஈவியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment