கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி; வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி; வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில், கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், 'கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடம் உள்ளது. ஆனால் அங்கு தமிழ்வழி கல்வி தேவை என உரிமை கோர முடியாது. தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும்,' என கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று (டிச.,02) உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment