ஓமைக்ரான் வைரஸின் முக்கிய அறிகுறிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, December 22, 2021

ஓமைக்ரான் வைரஸின் முக்கிய அறிகுறிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ஓமைக்ரான் வைரஸின் முக்கிய அறிகுறிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 2022ம் ஆண்டை வரவேற்க ஆவலாக உள்ள நமக்கு மிக பெரும் சவாலாக இருப்பது புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தான். கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள் கடந்த இரு வருடங்களாக பல்வேறு பாதிப்புகளை கொரோனாவால் நாம் சந்தித்து வந்துள்ளோம். அந்த வகையில் தற்போது உலக அளவில் பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை கொரோனா இதற்கு முன்பு இருந்த வகைகளை காட்டிலும் அதிக பாதிப்பை தருமா, இதற்கான முக்கிய அறிகுறிகள், எப்படி இதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது என்பதையெல்லாம் இனி தெரிந்து கொள்வோம். பொதுவான அறிகுறிகள் : தடுப்பூசி போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் ஓமைக்ரான் வகை கொரோனா பாதிக்ககூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது. மேலும் இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை காட்டிலும் வீரியம் அற்றதாக தற்போது வரை உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. கொரோனா நோய் தொற்று வந்தவர்களுக்கு சில குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக உடல் வலி போன்ற அறிகுறிகள் வரக்கூடும். மேலும் வாசனை அற்ற உணர்வு ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படவில்லை. வேறுபட்ட அறிகுறிகள் : கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்க கூடும். சிலருக்கு காய்ச்சல், சளி மட்டுமே இருக்கலாம். சிலருக்கு வாசனை அற்ற உணர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று கொண்டோருக்கு பசியின்மை பிரச்சனை அதிகம் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. பிசிஆர் பரிசோதனை : கொரோனா தொற்று போன்ற அறிகுறிகள் தென்பட்டதும், முதலில் செய்ய வேண்டியது ஆர்.டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை தான். இந்த பரிசோதனையில் உங்களுக்கு பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் கட்டாயம் உங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மூச்சு திணறல் போன்ற தீவிர பாதிப்பு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அணுகுங்கள். மேலும் உங்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள்..! தொற்றை தடுக்கும் முறை : எந்த வகை கொரோனா வைரஸாக இருந்தாலும், எதாவது சிறிய அறிகுறிகள் தென்பட்டதும் நீங்கள் அவசியம் டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிவது, கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். காட்டு தீயை போன்று பரவி வரும் இந்த பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது நம் கையில் தான் உள்ளது. எனவே நாம் எல்லோரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment