புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான ஏ.டி.எம்., கட்டணம் ஜி.எஸ்.டி., உடன் ரூ.25 ஆக வசூலிக்கப்படும்.வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் அல்லது இருப்பை பரிசோதிக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில் என்றால் மெட்ரோ நகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.இந்நிலையில், ரிசர்வ் வங்கி இக்கட்டணத்தை ஜனவரி 1, 2022 முதல் ரூ.24.78 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது. அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. அதே போல், கடந்த ஆகஸ்ட் முதல் பரிமாற்றக் கட்டணம் எனப்படும், பிற வங்கி ஏ.டி.எம்.,களை ஒருவர் பயன்படுத்தும் அவரது வங்கி செலுத்தும் கட்டணமும் ரூ.15லிருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment