ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்துவிட்டு பின்வாங்கிய மின்வாரியம்; தடுப்பூசி அவ்வளவு தானா? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, December 2, 2021

ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்துவிட்டு பின்வாங்கிய மின்வாரியம்; தடுப்பூசி அவ்வளவு தானா?

ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்துவிட்டு பின்வாங்கிய மின்வாரியம்; தடுப்பூசி அவ்வளவு தானா?மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் டிச.,7ம் தேதிக்குள் கோவிட் தடுப்பூசி செலுத்தவில்லை எனில், டிசம்பர் மாத சம்பளம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் மதுரை மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் 2ம் தவணையினை வரும் டிச.,7ம் தேதிக்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத சம்பளம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த நவ.,26ல் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.எனவே, தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை டிச.,7ம் தேதி சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சம்பளம் வழங்குவதாக வெளியான இந்த அறிவிப்பால் மின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரத்து இந்த அறிக்கை விவாதத்தை கிளப்பிய நிலையில், உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், 'கோவிட் தடுப்பூசி தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிட் முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது,' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment