9 வாரங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, January 9, 2022

9 வாரங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் ஒன்பது வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாததால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையால், அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தீபாவளி பரிசாக மத்திய அரசு, 2021 நவம்பர்3ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதையடுத்து அம்மாதம் 4ம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.அன்றைய தினம், தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று வரை ஒன்பது வாரங்களுக்குமேலாகியும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இது, வாகன ஓட்டிகளிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment