பொங்கல் பொருட்களை வாங்க பைகளை எடுத்து வரலாம்; தமிழக அரசு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, January 9, 2022

பொங்கல் பொருட்களை வாங்க பைகளை எடுத்து வரலாம்; தமிழக அரசு

'பொங்கல் பரிசு பொருட்களை வாங்க விரும்பும் பயனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்து பைகளை எடுத்து வரலாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 20 வகை பொருட்கள் இதுகுறித்து, அரசு அறிக்கை:தமிழகத்தில் உள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு 20 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது.இதுவரை 45.10 சதவீத கார்டுதாரர்களுக்கு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த தொகுப்புகளுக்கான பொருட்கள் முழுதும் இருந்தும், சில பகுதிகளுக்கு பைகள் முழுவதுமாக வந்து சேராததால், தொகுப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. 'ஒமைக்ரான்' தொற்றை சமாளிக்க, அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பைகள் தைக்கும் பணியில், சில இடங்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பைகள் இல்லாமல் 20 பொருட்களை பெற்று கொள்ள விரும்பும் பயானிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்கவும், அவர்களுக்கு பைகளை பின்னர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பைகள் இல்லாமல் பொருட்களை வாங்க விரும்பும் பயனாளிகள், தங்களே பைகளை எடுத்து வந்து தொகுப்புகளை பெற்று செல்லலாம். 'டோக்கன்'பைகள் இன்றி பரிசு தொகுப்பை பெறும் பயனாளிகள், பின்னர் பிற ரேஷன் பொருட்களை வாங்க வரும் போது, பைகளை பெற்று கொள்ளலாம்.இதற்காக பைகள் இல்லாமல் பரிசு தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனி 'டோக்கன்' வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சொன்னது 'தினமலர்' ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்க, 50 சதவீதத்திற்கும் குறைவான துணி பைகள் மட்டுமே அனுப்பிய நிலையில், பைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களை வழங்க முடியாமல் ரேஷன் ஊழியர்களும், எடுத்து செல்ல முடியாமல் கார்டுதாரர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பது குறித்து நம் நாளிதழில், 6ம் தேதி விரிவாக செய்தி வெளியானது.இதையடுத்து இந்த அறிவிப்பை, அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment