கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, January 12, 2022

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

கடலூர், ஜன.12- 2022-ம் ஆண்டுக்கான சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான "கபீர்புரஸ்கார்" விருது குடியரசு தின விழாவின் போது முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒருநபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. 

அதாவது ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். அதனால் தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவர்கள் ஆவர். 


இந்த விருதானது ஒருசாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிறசாதி, இன, வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. அதனால் இவ்விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம் ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment