ஊரடங்கு நாளான இன்று... நிறைய வாசியுங்க! வெளியே போனால் தொற்று! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, January 9, 2022

ஊரடங்கு நாளான இன்று... நிறைய வாசியுங்க! வெளியே போனால் தொற்று!

கோவையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மாநகரில் 700 போலீசார், பாதுகாப்பு பணியில் இருப்பர். ஆகவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லாமல், வீட்டில் இருந்தபடி, நிறைய புத்தகங்கள், நாளிதழ்களை படிக்கலாம். குழந்தைகளுக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தலாம்.கொரோனா பரவல் தடுக்கும் நோக்கத்துடன் மாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் காரணம் இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று, மாவட்ட கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பால், தினசரி பத்திரிகைகள், மருந்துப் பொருட்கள், வினியோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற அத்தியாவசிய பணிக்கு செல்வோர், அடையாள அட்டையுடன் செல்வது அவசியம்.மாநகரில் ஏற்கனவே இருக்கும் 11 எல்லை சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 30 சிறப்பு சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவர்.கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க, 23 ஜீப்களில் போலீசார் ரோந்து சுற்றி வருவர். 44 இரு சக்கர வாகன போலீஸ் ரோந்துப் படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:முழு ஊரடங்கை முன்னிட்டு, கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் காவல் பணி தீவிரமாக இருக்கும். 700க்கும் மேற்பட்ட போலீசார், மாநகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் பணியில் இருப்பர். அது மட்டுமின்றி, எஸ்.ஐ., மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும், நாள் முழுவதும் ரோந்துப் பணியில் இருப்பர். கொரோனா பரவல் தடுப்புக்காக, அரசு கொண்டு வந்துள்ள ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவசியம் இன்றி பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது. காரணம் இன்றி வெளியில் சுற்றுவோர் கண்டறியப்பட்டால், கடும் போலீஸ் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு, பிரதீப் குமார் தெரிவித்தார்.இன்று நாள் முழுவதும் வீட்டில் இருந்தபடி புத்தகங்களையும், நாளிதழ்களையும் வாசிக்கலாம். வாசிப்பின் முக்கியத்துவத்தை வருங்கால சந்ததியினருக்கு வலியுறுத்தலாம்.

No comments:

Post a Comment