தமிழ் கல்வெட்டுப்படிகள் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, January 9, 2022

தமிழ் கல்வெட்டுப்படிகள் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிகள், தமிழகத்துக்கு மாற்றப்பட உள்ளன.நாட்டில் 1860ல் மத்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதன் முதல் இயக்குனராக அலெக்சாண்டர் கன்னிங்காம் நியமிக்கப்பட்டார். 1886ல், கல்வெட்டியல் பிரிவு துவக்கப்பட்டது.இதற்கு, ஹூல்ஸ் என்பவர் தலைமை ஏற்றார். 1887 முதல் சென்னையில் செயல்பட்ட அந்த அலுவலகம், தட்பவெப்பநிலை காரணமாக, 1911ல் ஊட்டிக்கு மாற்றப்பட்டது.நாட்டில் உள்ள கல்வெட்டுகள் மைப்பூசி காகிதங்களில் படியெடுக்கப்பட்டு, மைப்படிகளாக பாதுகாக்கப்பட்டு, அதிலிருந்து அசோகர் கால கல்வெட்டுகள், தென்னிந்திய கல்வெட்டுகள் உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்பட்டன. ஆய்வாளர்கள் வலியுறுத்தல்இந்நிலையில் 1966ல், கல்வெட்டியல் பிரிவு, ஊட்டியில் இருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது.இப்பிரிவில் இருந்த, 80 சதவீதம் மைப்படிகள், தமிழ் கல்வெட்டுப்படிகளாக இருந்த நிலையில், மைசூரு பிரிவில் தமிழ் கல்வெட்டு அலுவலர்கள் அதிகம் நியமிக்கப்படாததால், அவை பராமரிக்கப்படாமலும், பதிப்பாக வெளியிடப்படாமலும் வீணாயின.இந்நிலையில், மைசூரு அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், மேலும் தமிழ் கல்வெட்டுப்படிகள் அழிந்தன. இதைத் தொடர்ந்து, தமிழ் கல்வெட்டுப்படிகளை, தமிழகத்துக்கே மாற்ற வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.மேலும், தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. விசாரணை முடிவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மைசூரு கல்வெட்டியல் பிரிவில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தொல்லியல் ஆய்வாளர்களான ராஜவேலு, பத்மாவதி, மார்க்சியகாந்தி, சாந்தலிங்கம், சிவானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது.அதன் அறிக்கை அடிப்படையில், மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுப்படிகள் அனைத்தையும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யும்படி, நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து, மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மைசூரு தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய, சமீபத்தில் உத்தரவிட்டார்.வீணான நிலைமேலும், தென் சரக துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர் அலுவலகமாக செயல்பட்ட அலுவலகம், இனி, தமிழ் கல்வெட்டுப் பிரிவு, துணை கண்காணிப்பாளர் அலுவலகமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அலுவலர்கள் கூறியதாவது: நுாறாண்டுக்கு முன் படியெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுப் படிகள், பதிப்பிக்கப்படாமல், கர்நாடக மாநிலத்தில் வீணான நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவால், தமிழகத்துக்கு மாற்றப்பட உள்ளன. விரைவில், தஞ்சை தமிழ் பல்கலை வளாகத்துக்குள், இதற்கான அலுவலகம் செயல்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய தொல்லியல் துறை விரைவில் அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment