பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்., 25ல் துவங்குகிறது
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, ஏப்., 25ல் துவங்குகிறது.
அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 எழுத்து தேர்வுகள் நடத்தும் முன், செய்முறை தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி செய்முறை தேர்வு துவங்கப்பட வேண்டும்.
பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பாடவாரியாக தேர்வு நடத்தி, மே 2க்குள் முடிக்க வேண்டும்.
உயிரியல் தேர்வில், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான, செய்முறை தேர்வு மதிப்பெண்களை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். இயற்பியல் செய்முறை தேர்வில், மாணவர்கள் அறிவியல் கணக்கீட்டு கருவி மட்டும், தேர்வறைக்குள் எடுத்து வர அனுமதிக்கலாம்.
மாணவர்கள் பெற்று உள்ள மதிப்பெண்களை பட்டியலாக தயாரித்து, மே 4க்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை, மே 14க்குள் அரசு தேர்வு உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த புகாரும் இன்றி தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-
No comments:
Post a Comment