10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் கல்வித்துறை தகவல் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, April 5, 2022

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் கல்வித்துறை தகவல்

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 27 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கு மே 9-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. 

இந்த நிலையில் அந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் எத்தனை மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அதில், பள்ளி மாணவர்களாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 மாணவர்கள், 4 லட்சத்து 68 ஆயிரத்து 586 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகின்றனர். 

11-ம் வகுப்பு தேர்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும், 2 திருநங்கைகள் என 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எதிர்கொள்கின்றனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுத இருக்கின்றனர். 27 லட்சம் பேர் இதுதவிர தனித்தேர்வர்களாக 10-ம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்து 890 பேரும், 11-ம் வகுப்பு தேர்வை 5 ஆயிரத்து 717 பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 28 ஆயிரத்து 380 பேரும் எழுதுகின்றனர். 

 ஆக மொத்தம் பள்ளித்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வர்கள் என 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 27 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேர் எழுத இருக்கின்றனர். மேற்கண்ட தகவலை கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment