தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் ;
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் ;தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம் கேள்விதனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு
கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை
நடத்தப்பட்டது குறித்த வழக்கை ஏன் சிபிஐ
விசாரணைக்கு மாற்றக் கூடாது? என தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2020-21ஆம் கல்வியாண்டுக்கு தனியார் மருத்துவ
கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் 90
இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டதாக வழக்கு
தொடரப்பட்டது. இதன் விசாரணையில், புகாரில்
குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற மருத்துவ
மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளரான
செல்வராஜனின் ஓய்வூதிய பலன்களை நிறுத்த
அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில்,
கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட
கலந்தாய்வுகளில் இடங்கள் நிரம்பாததால் தகுதி
அடிப்படையில் சேர்க்கை நடத்த சுயநிதி
கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு
கலந்தாய்வு நடத்திய தேர்வு குழு, நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கு நடத்தாதது ஏன்? என நீதிபதிகள்
கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment