CBSE Board Exam 2023: கொரோனா தொற்றுக்கு முந்தைய பாடத்திட்டங்கள் தொடரும் - சிபிஎஸ்இ அறிவிப்பு .
CBSE Board Exam 2023: 9 முதல் 12ம்
வகுப்பு வரையிலான 2023
கல்வியாண்டுக்கான
பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம்
அறிவித்தது. மேலும், 10 மற்றும்
12ஆம் வகுப்புக்களுக்கான வாரியத்
தேர்வுகள் ஒரே கட்டமாக
நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ
தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று
காரணமாக ஏற்பட்ட அசாதாரண
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,
பாடத்திட்டத் திருத்த
நடவடிக்கையை சிபிஎஸ்இ எடுத்தது.
அதன்படி, பாடத்திட்டங்களில்
உள்ள முக்கிய அம்சங்களைக் கை
வைக்காமல், 30 சதவீதம் வரை
பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.
மேலும், உள்மதிப்பீடு மற்றும்
ஆண்டு இறுதித் தேர்வில்
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில்
இருந்து தலைப்புகள் இடம்பெறாமல்
வினாத்தாள் தயாரிக்கப்பட்டது.
தற்போது, வெளியிடப்பட்ட புதிய
அறிவிப்பில், " வரும் கல்வியாண்டில்
இருந்து கொரோனாவுக்கு முந்தைய
காலக்கட்டடத்தில் இருந்த
பாடத்திட்டங்கள் தொடரும் என்றும்,
குறிப்பிட்ட சில தலைப்புகளில்
மட்டும் மாற்றம் இருக்கும்" என்று
தெரிவித்துள்ளது.
இரண்டு அமர்வுகள்
கிடையாது: கொரோனா நோய்த்
தொற்று முழுமையாக நீங்கவில்லை
என்றாலும், கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டதால், 10 மற்றும் 12ம்
வகுப்பு வாரியத் தேர்வுகளை
'ஆண்டு இறுதித் தேர்வு' (Annual
Examination) என்ற பழைய முறையில்
நடத்த சிபிஎஸ்இ
முடிவெடுத்துள்ளது.
கொரோனா முதலாவது
பெருந்தொற்று அலை காரணமாக,
2020ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி
முதல் 15 ஆம் தேதி வரை
நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம்
வகுப்புக்களுக்கான தேர்வுகளை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(CBSE) ரத்து செய்தது. கொரோனா
இரண்டாவது அலை காரணமாக,
2021 மே 4 முதல் ஜூன் 14 வரை
நடக்கவிருந்த 10,12-ஆம் வகுப்புத்
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் அத்தகைய எதிர்பாராத
சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கும்
பொருட்டு, 2021-
22கல்வியாண்டுக்கான பொதுத்
தேர்வை இரண்டு அமர்வுகளாக
நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்தது. அதனையடுத்து, முதல் அமர்வு
கடந்தாண்டு டிசம்பர் மாதம்
நடைபெற்றது.
இரண்டாம் அமர்வு
இந்த மாத இறுதியில் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டது.
முதல் அமர்வில் வெறும்
கொள்குறிவகை வினா விடையாக
(MCQ) இருந்த நிலையில், இரண்டாம்
அமர்வு எழுத்துத் தேர்வு
வினாத்தாளில் புறநிலை வகை
வினாக்களும், அகநிலை
வினாக்களும் இடம் பெற்றிருக்கும்.
மாணவர்கள், இரண்டு
அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்
அடிப்படையிலும், மாணவர்களின்
செயல்பாடு உள் மதிப்பீடு (Internal
Assesment) அடிப்படையிலும் இறுதி
மதிப்பெண் பட்டியல்
தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ
தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த இரண்டு அமர்வு
தேர்வு முறைக்கு பெற்றோர் மற்றும்
மாணவர்கள் தரப்பில் இருந்து
எதிர்ப்பு கிளம்பியது. தாங்கள்
மற்றும் இரண்டு முறை
சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக
நடப்புக் கல்வியாண்டு மாணவர்கள்
குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதனையடுத்து, இரண்டு அமர்வுகள்
கொண்ட தேர்வு முறையை
கைவிடுவதாக சிபிஎஸ்இ இன்று
அறிவித்துள்ளது.
அவ்வப்போதைய நிலவரங்களைத்
தெரிந்து கொள்வதற்கு,
cbseacademic.nic.in இணையதளத்தைப்
பார்க்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment