Devotion to God is required along with education, கல்வியறிவுடன் தெய்வ பக்தியும் தேவை: காமாட்சிபுரம் ஆதீனம் அறிவுரை - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, April 25, 2022

Devotion to God is required along with education, கல்வியறிவுடன் தெய்வ பக்தியும் தேவை: காமாட்சிபுரம் ஆதீனம் அறிவுரை

கல்வியறிவுடன் தெய்வ பக்தியும் தேவை: காமாட்சிபுரம் ஆதீனம் அறிவுரை




 கல்வியறிவு மட்டுமன்றி தெய்வ பக்தியும் மிகுந்து இருக்க வேண்டும், என, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மாணவர்களுக்கு விளக்கினார். பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவ, மாணவியர், தேர்வில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய் தனர்.

 சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மாணவ, மாணவியருக்கு சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும், போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கல்வியறிவு மட்டுமன்றி தெய்வ பக்தியும் மிகுந்து இருக்க வேண்டும். யாரிடம் தெய்வபக்தி அதிகம் உள்ளதோ அவர்கள் தாய், தந்தையரை மதிப்பவராகவும் இருப்பர்.

இளமையில் கல் என்று கூறுவர். இளமை காலத்தில் நல்லவர்களோடு பழகி, நல்ல விஷயங்களை கேட்டு, நல்ல பண்புகளை வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும் உரியவர்களாக நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் கல்வி அவசியம்.

 இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியர், நவக்கிரகங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, தேர்வில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்த மாணவ, மாணவியருக்கு காமாட்சிபுரி ஆதீனம் பேனா வழங்கி ஆசி வழங்கினார்.


Devotion to God is required along with education,


There should be not only education but also devotion to God, as explained by Kamatsipuri Aadeenam Sivalingeswara Swami, students. Students of Arulpuram Jayanti School near Palladam offered special prayers for success in the examination.

 At Chittambalam Navagraha Fort, a special worship service was held for students. Kamatchipuri Aadeenam Sivalingeswara Swami spoke: It should make the students feel that they should worship and adore the Mother, the Father, the Guru and the Deity. There should be not only education but also devotion to God. Those who have a lot of godliness will also value their mother and father.

In their youth they would say stone. We need to get used to good people in our youth, listen to good things, develop good qualities and prepare ourselves to be worthy of home and country. Education is not just for the profession. Education is also necessary to develop good qualities.

 Thus he spoke. Earlier, students of the school anointed and worshiped the holy water for the Navagrahas. Subsequently, the student, who had prayed for success in the examination, was blessed with a pen by Kamatchipuri Aadeenam.

No comments:

Post a Comment