Government Medical College Hospital in the suburbs?...,புறநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எப்போது? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, April 18, 2022

Government Medical College Hospital in the suburbs?...,புறநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எப்போது?

புறநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எப்போது?


 தாம்பரம் : தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், மருத்துவமனை அமைப்பதற்காக, சென்னை மாநகராட்சிக்கு 33 ஏக்கர் நிலம் தானமாக கிடைத்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியில், ஆக்கிரமிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றன. நிலத்தை மீட்டு, தென் சென்னை புறநகர் மக்கள் வசதிக்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம், X பேரூராட்சியாக இருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், தன் 33 ஏக்கர் நிலத்தை, சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அவர் தானப் பத்திரத்தில் தெளிவாக தெரிவித்துள்ளார். உரிய பராமரிப்பின்றி இருந்த இடத்தில், சிலர் ஆக்கிரமித்து, 'கிரிக்கெட் அகாடமி' என்ற பெயரில், கட்டணம் வசூலித்து, கிரிக்கெட் பயிற்சி அளித்தனர்.

 அதன் பின், சென்ட், 3 லட்சம் ரூபாய் வரை, இடத்தை விற்பனை செய்யும் முயற்சியும் நடந்தது. இது குறித்து, நம் நாளிதழ் அவ்வப்போது வெளியிட்ட செய்தியால், சென்னை மாநகராட்சி தலையிட்டு, ஆக்கிரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.பின், ஆக்கிரமிப்பை தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், தொழுநோய் மருத்துவமனையை, சென்னை மாநகராட்சி கட்டினாலும், அதற்கு, டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படாததால், இன்று வரை அந்த கட்டடம் பயனின்றி கிடக்கிறது.

 இதற்கிடையே, நிலத்தில் 25 சென்ட் பரப்பளவை ஆக்கிரமித்து, தனியார் குழந்தைகள் இல்லம் கட்டப்பட்டு, மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளதாகவும், 1 ஏக்கர் பரப்பளவை, விளையாட்டு மைதானமாக, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் ) குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள நிலங்களும், கருவேல மரங்களுடன், புதர்மண்டி கிடக்கிறது. ஆக்கிரமித்து குழந்தை இல்லம் நடத்துபவர், அந்த இடத்திற்கு பட்டா கேட்டு, வருவாய் துறையை அணுகியதாகவும், பலமுறை அணுகியும் அவருக்கு பட்டா கொடுக்க, அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 இந்நிலையில், சென்னை மாநகராட்சி வசம் உள்ள இந்த நிலத்தை பயன்படுத்தி, தென்சென்னை பகுதி மக்களின் வசதிக்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, தென் சென்னை மக்கள் கூறியதாவது:மருத்துவமனை கட்ட, 33 ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டும், அந்த நிலம் குறித்து, சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. சென்னை மாநகரில், அரசு மருத்துவ கல்லுாரிகள் அனைத்தும், மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் தான் உள்ளன.

 தென் சென்னை, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சை பெற, அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றாலும், உயர் சிகிச்சைகளுக்காக அங்கிருந்தும், சென்னையில் உள்ள, அரசு மருத்துவமனைகளுக்கு தான், அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 அதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பின், சிகிச்சை பெற விரும்புவோர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்துார், தாம்பரம், கிண்டி, அண்ணாசாலை என, குறைந்தது 60 முதல் 70 கி.மீ., துாரம் கடந்து, சென்னை ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டி உள்ளது. இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல், பல உயிரிழப்புகளும் நடக்கின்றன. இதில், தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாக கருதப்படும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தினமும், 12 ஆயிரம் பேர், சராசரியாக சிகிச்சை பெறுகின்றனர். 

இம்மருத்துவமனையை ஒப்பிடுகையில் மாடம்பாக்கத்தில், மருத்துவமனை பயன்பாட்டிற்காக, தானமாக வழங்கப்பட்டு உள்ள நிலம் பெரியது. இங்கு, புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவக்கினால், அனைத்து வசதியுடன் அமைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment