குரூப் - 4 விண்ணப்பிக்க கடைசி நாள்;Group - 4 Last day to apply - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, April 28, 2022

குரூப் - 4 விண்ணப்பிக்க கடைசி நாள்;Group - 4 Last day to apply

குரூப் - 4 விண்ணப்பிக்க கடைசி நாள்  சென்னை: குரூப் - 4 பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது. தமிழக அரசு துறைகளில், குரூப்-4 பதவிகளில் காலியாக உள்ள, 7,301 இடங்களை நிரப்ப, ஜூலை 24ல் போட்டி தேர்வு நடக்கிறது.

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே, இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச் 30ல் துவங்கியது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் இன்று நள்ளிரவு முடிகிறது. இந்த முறை, 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், கடந்த வாரம் வரை, 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். இன்றுடன் அவகாசம் முடிவதால், விண்ணப்பித்தோரின் மொத்த எண்ணிக்கை நாளை தெரியவரும்.

Group - 4 Last day to apply

 Chennai: The opportunity to apply for the DNPSC, Competitive Examination for Group-4 post ends today. Competitive examination will be held on July 24 to fill 7,301 vacant Group-4 posts in Tamil Nadu government departments.

 The examination is to be conducted through DNPSC, the Tamil Nadu Civil Service Selective. Online application registration for the exam started on March 30. In this case, the deadline for application registration is midnight today. This time, it was expected that more than 20 lakh people would apply for the exam.

But, as of last week, only 13 lakh people had applied. The total number of applicants will be known tomorrow as the deadline ends today.

No comments:

Post a Comment