காத்திருங்க மாணவர்களே... நல்ல செய்தி வரும்!(உக்ரைனில் படிப்பை முடிக்க முடியாமல், நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள்)
உக்ரைனில் படிப்பை முடிக்க முடியாமல், நாடு
திரும்பிய மருத்துவ மாணவர்கள், உள்நாட்டு
பல்கலை கழகங்களில் தங்கள் படிப்பை முடிக்க,
மத்திய அரசு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி,
டில்லியில் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில்
ஈடுபட்டனர் என்ற செய்தியை
படித்தவுடன்,சிரிப்பதா, அழுவதா என்றே
தெரியவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து,
அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய
மாணவர்களை, பிரதமர் மோடி தலைமையிலான
அரசு, துரித நடவடிக்கை எடுத்து, பத்திரமாக மீட்டு
வந்தது.
அவர்களில் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்து,
பயிற்சியில் இருந்த மாணவர்கள், இங்கு
பயிற்சியை தொடர ஏற்பாடு செய்யப்படும் என,
தேசிய மருத்துவ கமிஷன் மார்ச் மாதம்
அறிவித்தது. அதே நேரத்தில், முதல், இரண்டு
மற்றும் மூன்றாமாண்டு படித்த மாணவர்கள்,
உக்ரைனின் அண்டை நாடுகளில் படிப்பை
தொடர்வது உட்பட, பல்வேறு வாய்ப்புகள் குறித்து,
மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த
விஷயத்தில் முடிவெடுக்க சற்று அவகாசம் தேவை.
உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் மற்றும்
அவர்களை ஈன்றெடுத்த புண்ணியவான்களிடம்
சில கேள்விகள்...உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற போது,
யாரைக் கேட்டுக் கொண்டு போனீர்கள்?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், மத்திய
அரசு உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி,
உங்கள்பிள்ளைகளை மீட்டு வந்தது.
அதற்கு நீங்கள்
காட்டும் நன்றி, போராட்டமா?
* எதற்கும் அவகாசம் வேண்டாமா? நீங்கள்
நினைத்தவுடன் எல்லாம் நிறைவேற வேண்டும்.
இல்லையென்றால், போராட்டம் என்பது என்ன
நியாயம்?
* உங்கள் சவுகர்யத்திற்கு வெளிநாட்டுக்கு
போவீர்கள்; வருவீர்கள். அப்போது, அரசு
தேவையில்லை. இப்போது மட்டும், உங்களின்
அபிலாஷைகளை, மத்திய அரசு உடனே
நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?
என்னமோ, மத்திய அரசே உங்களின் பிள்ளைகளை
வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு படிக்க
அனுப்பியது போல, நீங்கள் நடந்து கொள்வது
சரியல்ல.
முதலில், உங்கள் பிள்ளைகள் உங்களிடம்
பத்திரமாய் வந்ததற்கு இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள். போராட்டம், கீராட்டம் என்று
செல்லாமல், அமைதியாய் அரசை அணுகுங்கள்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, தடாலடியாக இந்திய
பல்கலைகளில் மாணவர் சேர்க்கையை நடத்த
முடியுமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
காத்திருங்கள்... நல்ல செய்தியை மத்திய அரசு
சொல்லும். நன்றி கெட்ட
தனமாக போராட்டம்
நடத்தாதீங்க!
- முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்
No comments:
Post a Comment