6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு;Final Exam for 6th-9th grade students; - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, April 28, 2022

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு;Final Exam for 6th-9th grade students;

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு; பள்ளிகளில் விரிவான ஏற்பாடு உடுமலை: அரசுப்பள்ளிகளில், 6 முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, மே, 6ல் துவங்கி, 13ல் முடிகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.நடப்பு, 2021-22ம் கல்வி ஆண்டில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, மே மாதம் நடக்கிறது. அதன்படி, 6 மற்றும் 7ம் வகுப்பிற்கான தேர்வில், மூன்றாம் பருவ குறைக்கப்பட்ட பாடப் பகுதியில் இருந்தும், 8 மற்றும் 9ம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் இருந்து வினாத்தாள்கள் அமைக்கப்படுகிறது.

 இதில், 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே உள்ள வளரறி மதிப்பீட்டிற்கு, 40 மதிப்பெண்கள், தொகுத்தறி மதிப்பீட்டிற்கு 60 மதிப்பெண்கள் அடிப்படையிலும் வினாத்தாள்கள் இருக்கும். இதேபோல், 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நுாறு மதிப்பெண்கள் அடிப்படையில், வினாத்தாள்கள் இடம்பெறுகிறது.

 கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 6, 7-ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை, தேர்வு நடக்கிறது. அதன்படி, மே 6ல், கணிதம்; 9ல், அறிவியல்; -10ல், சமூக அறிவியல்; 11ல், உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி; 12ல், ஆங்கிலம்; 13ல், தமிழ் தேர்வு நடக்கிறது. இதேபோல், 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதியம், 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில், மே 6ல் ஆங்கிலம்; 9ல்,தமிழ்; 10ல், உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி; 11ல், கணிதம்; 12ல், அறிவியல்; 13ல், சமூக அறிவியல் தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்வுகள் முடிந்த பின், விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்து, தொகுப்பு மதிப்பெண் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Year-end exam for students in grades 6-9; Extensive arrangement in schools


Udumalai: In government schools, the year-end examination for 6th to 9th class students starts on May 6 and ends on May 13. Extensive arrangements are being made for this. In the current academic year 2021-22, the final examination for students of 6th to 9th class will be held in May. Accordingly, in the examination for Class 6 and 7, the question papers are set from the reduced subject area of ​​the third term and from the reduced subject area for the 8th and 9th classes.

 In this, for 6th and 7th class students, the question papers will be 40 marks for the existing growth assessment and 60 marks for the summation assessment. Similarly, for 8th and 9th class students, the question papers are based on five marks.

 Education officials said:

 For 6th and 7th grades, the exam takes place from 2:00 pm to 4:00 pm. Accordingly, on May 6, Mathematics; In 9, science; In -10, social sciences; In 11, physical education and environmental education; In 12, English; On the 13th, the Tamil exam is going on. Similarly, for 8th and 9th class students, the examination is conducted from 2:00 pm to 4:00 pm. Thus, English on May 6; In 9, Tamil; In 10, physical education and environmental education; In 11, mathematics; In 12, science; On the 13th, the social science exam will take place.

After the completion of the examinations, it is advised to evaluate the answer sheets in the respective schools and keep the package score list ready. Thus, they said.

No comments:

Post a Comment