பிளஸ் 2 பொதுத்தேர்வு: 8.37 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2
பொதுத் தேர்வு மே 5ம் தேதி துவங்கியது. மொத்தம்
3,119 மையங்களில் நடக்கும் தேர்வில், 8.37 லட்சம்
மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
முறைகேடுகளை தடுக்க, 37 அதிகாரிகள் கொண்ட
உயர்நிலைக் குழு; 4,291 பேர் கொண்ட பறக்கும்
படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்
தேர்வு துவங்கியது. முதல் நாள் மொழிப் பாடம்; 9ம்
தேதி ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நடக்கின்றன.
அடுத்து வரும் நாட்களில், மற்ற பாடங்களுக்கு
தேர்வுகள் நடக்கின்றன.
தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2வில், 7,506
பள்ளிகளைச் சேர்ந்த, 4.31 லட்சம் மாணவியர்
உட்பட, 8.37 லட்சம் பேர் பங்கேற்றனர். சிறைக்
கைதிகள் 73 பேர், 28 ஆயிரம் தனித் தேர்வர்களும்
தேர்வு எழுதினர். தேர்வுக்கான வினாத்தாள்கள்,
அரசு தேர்வுத் துறையால் அந்தந்த
மாவட்டங்களுக்கு, முன்கூட்டியே அனுப்பப்பட்டன.
தேர்வுக்கு முன் வினாத்தாள்கள், லீக் ஆகாமல்
தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா மற்றும்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு நாளையும், பிளஸ் 1
மாணவர்களுக்கு மே 10ம் தேதியும் பொதுத்
தேர்வுகள் துவங்க உள்ளன.
தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல்,
மதியம் 1:15 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வரின்
விபரங்கள் பதிவிடவும், வினாத்தாள்
வினியோகத்துக்கும் முதல் 15 நிமிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. விடைத்தாளில் விடை எழுத,
மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Plus 2 General Examination: 8.37 lakh students participated
Chennai: In Tamil Nadu, Puducherry, the Plus 2 general examination started on May 5. A total of 8.37 lakh students participated in the examination which was held in 3,119 centers.
To prevent abuse, a high-level panel of 37 officers; Flying squads of 4,291 have been formed. General examination for Plus 2 students has started in Tamil Nadu. First day language lesson; English course exams are held on the 9th.
In the coming days, exams for other subjects are going on. In Tamil Nadu, Pondicherry, Plus 2 had 8.37 lakh participants, including 4.31 lakh students from 7,506 schools. 73 prisoners and 28 thousand individual candidates wrote the exam. The question papers for the examination were sent in advance by the State Examination Department to the respective districts.
Before the exam the question papers are put on 24-hour surveillance camera and gun-toting police security to prevent them from becoming a league. In Tamil Nadu, general examinations are scheduled to begin tomorrow for Class 10 students and on May 10 for Plus 1 students.
All exams will be held from 10 a.m. to 1:15 p.m. The first 15 minutes are allotted for recording the details of the examinee and distribution of the question paper. Three hours are allotted to write the answer on the answer sheet.
No comments:
Post a Comment