7.5 percent quota in higher education: Student profile input., உயர்கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு: மாணவர் விவரம் உள்ளீடு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, May 9, 2022

7.5 percent quota in higher education: Student profile input., உயர்கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு: மாணவர் விவரம் உள்ளீடு

 உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து, மாணவர் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணி வேகமெடுத்துள்ளது.

 உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை, மீன் வளர்ப்பு, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லுாரி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து கல்லுாரிகளுக்கும், 2021 --22 கல்வியாண்டு முதல், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

 இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், அவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். வரும், 13க்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், திருப்பூர் மாவட்டத்தில் நேற்றும் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

7.5 percent quota in higher education: Student profile input


Following the allocation of 7.5 per cent seats to government school students in higher education, the task of uploading student details on the EMIS site has accelerated.

 For government school students in higher education, 7.5 per cent reservation has been announced. The scheme will be implemented from the 2021 --22 academic year for all medical, engineering, agriculture, veterinary, fisheries, law colleges, private colleges, government and government aided colleges.

 Following this, the State Project Director has directed all government schools to upload their details on the EMIS website for the benefit of students in grades six to plus two. Teachers were involved in the uploading process yesterday in Tirupur district as the work is expected to be completed by the 13th.

No comments:

Post a Comment