ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் , Schools will reopen on June 13 - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, May 25, 2022

ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் , Schools will reopen on June 13

ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - - அமைச்சர் அன்பில் மகேஷ்



 பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள் வழங்கும் திட்டம் ஆசிரியர்களுக்கான மின்பதிவேடுகள், ஆசிரியர்களுக்கான பணிப்பலன் செயலி, கல்வியாண்டிற்கான நாட்காட்டி. ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி . ஆகியவற்றை வழங்கும் விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

 பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20ல் இருந்து 12ம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார். அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023 மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

 அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023 மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

Schools will reopen on June 13 - - Minister Anbil Mahesh


 Project to provide e-services to the public on behalf of the school education department Teacher Skills Development Project Calendar. The ceremony was inaugurated by the Minister of Education Anbil Mahesh Poyamozhi.

 School Education Minister Anbil Mahesh Poyamozhi has unveiled the calendar for the coming academic year at the Anna Centenary Library in Chennai. Speaking at the event, the Minister had already announced that schools would be reopened on June 13 for students in grades one to ten. Classes 12 will start from June 20, he said.

 Speaking to reporters later, the minister said there was a need to conduct classes on Saturdays in the coming academic year, adding that appropriate mental health counseling would be provided to students after school starts. The Minister announced that the general examinations for the next academic year will begin on March 13, 2023 for Class XII, Class XII for Class XII and April 3 for Class XII.

 The Minister announced that the general examinations for the next academic year will begin on March 13, 2023 for Class XII, Class XII for Class XII and April 3 for Class XII.

No comments:

Post a Comment