கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
RTE | இலவச மற்றும் கட்டாயக்
கல்விச் சட்டத்தின் கீழ்
விண்ணப்பம் செய்வதற்கான
ன கால
அவகாசம் 25ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி
சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்
குழந்தைகளை சேர்ப்பதற்கு
விண்ணப்பம் செய்வதற்கான கால
அவகாசம் நாளையுடன் முடிய இருந்த
நிலையில், 25ஆம் தேதி வரை நீட்டிப்பு
செய்யப்பட்டிருப்பதாக
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்
கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த ஏழை
எளிய குடும்பத்தைச் சேர்ந்த
குழந்தைகளை இலவச மற்றும் கட்டாய
கல்வி சட்டத்தின் கீழ் தனியார்
பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த
திட்டத்தின் கீழ் சேரக்கூடிய
குழந்தைகளுக்கு LKG முதல் 8ம் வகுப்பு
வரை இலவசம்.அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான
மாணவர் சேர்க்கைக் கான ஆன்லைன்
பதிவு நடந்து வருகிறது.
மொத்தம்
உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம்
இடங்களுக்கு, நேற்று வரை ஒரு
லட்சத்து 15 ஆயிரம் பேர்
விண்ணப்பித்திருக்கின்றனர் .
விண்ணப்பம் செய்வதற்கு நாளை
கடைசி நாள் நாளை என்று
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த
நிலையில், வரும் 25-ஆம் தேதி வரை
நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக
மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக
அனைவருக்கும் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டத்தின் கீழ்
ஆண்டுதோறும் மாணவர்கள் சேரும்
எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை
சேர்த்த பிறகு கட்டணம் செலுத்த
சொல்லி பெற்றோர்களை
நிரபந்திப்பதும் நோய்த்தொற்று
காலத்தில் அரசு பள்ளிகளுக்கு
ஏராளமான மாணவர்கள் சென்றதும்
இதற்கு காரணமாக
முன்வைக்கப்படுகிறது.
Extension of time to apply under the Compulsory Education Act (RIGHT TO EDUCATION)
RTE | The deadline for applications under the Free and Compulsory Education Act has been extended to the 25th. Karubusamy, director of matriculation schools, said the deadline for applying to enroll children in private schools under the Free and Compulsory Education Act had been extended to 25, with the deadline set for tomorrow.
Children from economically disadvantaged poor simple families can be enrolled in private schools under the Free and Compulsory Education Act. Children who can join under this scheme are free from LKG to 8th class. Accordingly, online registration for the coming academic year is underway.
Out of a total of one lakh thirty thousand seats, one lakh 15 thousand people have applied till yesterday. The Directorate of Matriculation Schools has announced that the last date for applications has been extended to the 25th of this month.
Over the past few years the number of students enrolling under the Right to Education Act has been declining every year. The reason given for this is that parents are forced to pay fees after enrolling their children in private schools and a large number of students go to government schools during the epidemic.
No comments:
Post a Comment