Schools need human rights lessons!., பள்ளிகளில் மனித உரிமைகள் பாடம் வேண்டும்! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, May 10, 2022

Schools need human rights lessons!., பள்ளிகளில் மனித உரிமைகள் பாடம் வேண்டும்!

பள்ளிகளில் மனித உரிமைகள் பாடம் வேண்டும்! 



லாக் அப் மரணங்கள் குறித்து, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ஜி.திலகவதி: தமிழகத்தில், காவல் துறை - பொதுமக்கள் விகிதம் மிகக் குறைவு. காவல் துறையில் உள்ள ஒருவர், வாரம், 72 மணி நேரம் வரை பணியாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.

 இந்த கடும் பணிச் சுமையால், காவலர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஐ.பி.சி., - சி.ஆர்.பி.சி., மற்றும் தடயவியல், விசாரணை முறை, உளவியல் என, ஏராளமானவற்றை குறுகிய காலத்தில் அறிய வேண்டிய அளவுக்கு, காவலர்களின் பயிற்சி காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட பயிற்சிகளோடு, ஏராளமான அதிகாரமும்  அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

 அந்த அதிகாரத்தை யார் மீது, எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டியது அவசியம். ஒருவரை கைது செய்யும் போது, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, புகழ்பெற்ற டி.கே.பாசு வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. எனவே, கைது செய்வதையே தண்டனையாக மாற்றக்கூடாது.

 கைது செய்யப்படும் நபருக்கோ, தனக்கிருக்கும் உரிமைகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. அப்படிப்பட்ட நபர்கள் தான், லாக் அப் மரணம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கடந்த, 1980களில் இது பற்றி ஆய்வு செய்த அருண் சவுரி, ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் சிறுபான்மையினரே, பெரும்பாலும் இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளார்.

 இன்றும், அதே நிலை தான் தொடர்கிறது. நீதித்துறையின் ஒத்துழைப்பில், காவல் துறையினர் இது போன்ற குற்றங்களில் இருந்து தப்பிக்க வழிவகுப்பது துரதிருஷ்டவசமானது.மனித உரிமை என்றால் என்ன, அவற்றை மீறாமல் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, காவலர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

 டாணாக்காரன் திரைப் படத்தின் இயக்குனர், தமிழ்: காக்கி உடை தனக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குவதாக, பெரும்பாலான காவலர்கள் கருதுவதே பிரச்னையின் அடிப்படை. அந்த அதிகாரம் யார் மீது செலுத்தப்படுகிறது என்பதும் கவனத்துக்குரியது.

 அடித்தால் கேட்க ஆளில்லாத, எந்தப் பின்புலமும் இல்லாத எளியவர்களே, போலீஸ் காவலில் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர்; இறந்தும் போகின்றனர். அவர்களை தாக்கும் காவலரும், ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவராகவே இருப்பார். அவரும் திட்டமிட்டு அடிப்பது இல்லை. தனக்கு வழங்கப்பட்டு இருப்பதாக, அவர் நம்பும் அதிகாரத்தை இப்படியான நபர்கள் மீது செலுத்துகிறார்.

Schools need human rights lessons!


Regarding lock-up deaths, former IPS officer G Tilakwati: In Tamil Nadu, the police-civilian ratio is very low. Someone in the police force is forced to work up to 72 hours a week.

 Due to this heavy workload, the guards are subjected to great stress. IPC, - CRPC, and forensics, the method of investigation, the psychology, as much as the need to know in a short period of time, the training period of the guards is fixed. With such training, they are given a lot of power.

 It is necessary to tell who, when and how to use that power. In the case of the famous DK Basu, the Supreme Court has stated the rules to be followed when arresting a person. Therefore, arrest should not be construed as a punishment.

 The arrested person does not know anything about his rights. It is such individuals who are subjected to atrocities such as lock-up death. Arun Chowdhury, who researched this in the past, said that the poor, the people below the poverty line and the minorities are often the victims of such torture.

 Even today, the same situation persists. It is unfortunate that the police, in collaboration with the judiciary, are leading the way in escaping such crimes.

 The director of the movie Danakkaran, Tamil: The root of the problem is that most of the guards think that khaki dress gives them skyrocketing power. It is also noteworthy who that power is exercised over.

 Ordinary people with no one to listen to the beatings and no background are subjected to torture in police custody; Are going to die. The guard who attacks them will also be from a simple background. He also does not plan and beat. He exercises the power over which he believes he has been given.

No comments:

Post a Comment