அதிர்ச்சியை ஏற்படுத்தும் 10ம் வகுப்பு கணித பாட தேர்வு...மாணவர்கள் அதிர்ச்சி , Shocking 10th Public Exam Maths Paper ... students shocked - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, May 25, 2022

அதிர்ச்சியை ஏற்படுத்தும் 10ம் வகுப்பு கணித பாட தேர்வு...மாணவர்கள் அதிர்ச்சி , Shocking 10th Public Exam Maths Paper ... students shocked

10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித பாட தேர்வு கடினமாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாடத் தேர்வு பல மாணவர்கள் தேர்சி பெறுவார்களா என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்தும் அளவு கடினமாகவும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மதிப்பெண் மற்றும் வரைபடம் போன்றவை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் மிக கடினமாக இருந்துள்ளன. ஐந்து மதிப்பெண் பகுதியில் 14 கேள்விகள் தரப்பட்டு, பத்து கேள்விகளுக்கு விடை எழுதவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதில் 42 வது கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 14 கேள்விகளில், 5 கேள்விகள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இரு மதிப்பெண் பகுதிகளில் 14 கேள்விகள் தரப்பட்டு, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் . இதிலும் 5 கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும், மீதமிருந்த 10 கேள்விகளும் எழுத முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

 மேலும், 16வது கேள்வி நடத்தப்படாத பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டன. அதன்படி குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேள்வி கேட்கப்படாமல், நீக்கம் செய்யப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோடு 28 வது கேள்வி, பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருப்பதும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 இப்படி ஒட்டுமொத்தமாக மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் நேற்றைய கேள்வித்தாள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கணிதம் நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும் என்றும் கணிதத்தில் தேர்ச்சி மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறலாம் என்று எண்ணியிருந்த மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

 கொரொனோ காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பொதுத்தேர்வில் கேள்விகள் எளிமையாக கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேள்விகள் கடுமையாக கேட்கப்பட்டுள்ளதுடன் பழையபாடத்திட்டத்திலிருந்தும் கேள்விகள் இடம்பெற்றிருப்பது தேர்வுத்துறை எவ்வாறு இப்படியான முறையில் கேள்விகள் இடம்பெற அனுமதித்தது என்கிற கேள்வியையும் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்வைக்கின்றனர்.

 இதற்காக பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப் போகின்றது என்பது குறித்து வரக்கூடிய நாட்களில் தெரியவரும் மொத்தத்தில் கணிதத் தேர்வு மாணவர்களை கண்ணீர்விட செய்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது

It has been reported that yesterday's math test for 10th class students was difficult and shocking.


 Teachers say that for the 10th class students, yesterday's maths exam was so difficult that it was doubtful whether many students would pass and there were questions that were not in the syllabus. All the other questions except for a score and a map were very difficult. In the five mark area, 14 questions were asked and ten questions were asked to be answered.

 Question 42 is asked from the old syllabus. The authors also report that out of 14 questions, only 5 were answered. There are 14 questions to be asked in the two scoring areas and 10 questions to be answered. Teachers and students report that only 5 of these questions were answered and the remaining 10 were unwritten.

 Also, the 16th question is asked from the unpublished course. Course areas were reduced for students writing the public exam due to the corona. Controversy has arisen as to what was asked from the excluded course, not from the question that was reduced accordingly. In addition, the 28th question, which has been asked from the old syllabus, has come as a shock to the teachers.

 According to the teachers, yesterday's questionnaire was a shock to the students as a whole. It has been suggested that only students who are well versed in mathematics can pass and that students who thought they could get a pass mark in mathematics and pass the tenth grade have no chance of passing.

 Teachers have also asked students how questions could have been asked in such a manner that the questions were asked harshly as they were expected to be easily asked in the general examination after the schools were closed for 2 years due to Corono and the questions were from the old syllabus.

 It is no exaggeration to say that the math exam has brought tears to the eyes of the students in the coming days as to what the school education department is going to decide for this.

No comments:

Post a Comment