கவுன்சிலிங் இன்றி ஆயுர்வேத படிப்பில் சேர்ந்தவர்கள் தேர்வு எழுத அனுமதி Those who are studying Ayurveda without counseling are allowed to write the exam - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, May 23, 2022

கவுன்சிலிங் இன்றி ஆயுர்வேத படிப்பில் சேர்ந்தவர்கள் தேர்வு எழுத அனுமதி Those who are studying Ayurveda without counseling are allowed to write the exam

கவுன்சிலிங் இன்றி ஆயுர்வேத படிப்பில் சேர்ந்தவர்கள் தேர்வு எழுத அனுமதி 



சென்னை: கவுன்சிலிங் இன்றி, ஆயுர்வேத கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் 13 ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க தேர்வுக்குழு பரிந்துரைத்தது.

 இருந்தும் கல்லுாரிகளில் காலியிடங்கள் இருந்தன. இடங்கள் வீணாகாமல் இருக்க, காலியிடங்களை நிரப்பிக் கொண்டோம். இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஒப்புதல் அளித்து, தேர்வு எழுத அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தன. கல்லுாரிகள் சார்பில், வழக்கறிஞர்கள் கந்தன் துரைசாமி, வி.செல்வராஜ். கே.கோவிந்தராஜன், ஸ்ரீசரண் ரங்கராஜன், காட்சன் சுவாமிநாத் ஆகியோர் ஆஜராகினர்.

 நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 
தேர்வுக் குழுவுக்கு, கல்லுாரிகளின் நிர்வாகம் நிலைமையை தெரிவித்து உள்ளது. காலியிடங்களை நிரப்பவில்லை என்றால் வீணாகும் என்பதால், அவர்களாக மாணவர்களை சேர்த்துள்ளனர். கல்லுாரிகளின் நிர்வாகத்தினர் செயல், சட்டப்படியானதா, இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கவுன்சிலிங் வாயிலாகத்தான் மாணவர்கள் சேர்க்கை நடத்த முடியும்:

 நிர்வாகமே மாணவர்களை சேர்த்து, காலியிடங்களை நிரப்பிக் கொள்ள முடியாது என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க இயலாது. இளநிலை மருத்துவப் படிப்புக்கு மட்டுமே, உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சம்பந்தப்பட்டது.

 எனவே, தங்களின் உரிமைக்கு உட்பட்டு காலியிடங்களை நிரப்பி உள்ளனர். மனுதாரர்கள், கல்லுாரி மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தாமதமின்றி ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி

Those who are studying Ayurveda without counseling are allowed to write the exam


Chennai: The Chennai High Court has ordered that students enrolled in Ayurvedic colleges be allowed to write exams without counseling. Petition filed on behalf of 13 Ayurvedic Medical Colleges functioning in districts including Kanchipuram, Coimbatore, Erode, Kanyakumari: The Selection Committee recommended to include students in the Government and Administrative quota.

 There were vacancies in colleges though. We filled the vacancies so that the seats would not be wasted. The petitions came up for hearing before Judge GR Swaminathan. On behalf of the colleges, advocates Kandan Duraisamy, V. Selvaraj. K. Govindarajan, Sreesaran Rangarajan and Katsan Swaminath appeared.

 Order issued by the Judge:
To the selection committee, the management of the colleges has informed the situation. They have added students as they are because it would be a waste if the vacancies were not filled. The question has arisen as to whether the action of the management of the colleges is legal or not. Students can only be admitted through counseling:

 The administration itself could not add students and fill the vacancies, the government said. This is unacceptable. Restrictions imposed by the Supreme Court apply only to undergraduate medical studies. In this case, Indian medicine and homeopathy were involved.

 Therefore, they have filled the vacancies subject to their entitlement. Petitioners should allow college students to write the exam. Hall tickets must be issued without delay. Thus Judge

No comments:

Post a Comment