பிளஸ் 2 வேதியியலுக்கு 4 போனஸ் மதிப்பெண் ,.4 Bonus Marks for plus 2 chemistry - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, June 1, 2022

பிளஸ் 2 வேதியியலுக்கு 4 போனஸ் மதிப்பெண் ,.4 Bonus Marks for plus 2 chemistry

பிளஸ் 2 வேதியியலுக்கு 4 போனஸ் மதிப்பெண்


  பிளஸ் 2 பொது தேர்வில், வேதியியல் வினாத்தாளில், இரண்டு கேள்விகளுக்கு, நான்கு மதிப்பெண்கள் போனசாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில், இந்த ஆண்டு வேதியியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

சில வினாக்கள் கடினமாகவும், அவுட் ஆப் பஸ் என்ற குறைக்கப்பட்ட பாடத் திட்டத்துக்கு வெளியில் இருந்தும் இடம் பெற்றன. இதனால், சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க, விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 அதில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொது தேர்வில், வேதியியல் வினாத்தாள் பகுதி ஒன்றில், அ வகையில், ஒன்பதாம் எண் கேள்வி அல்லது ஆ வகையில் ஐந்தாம் எண் கேள்வி; பகுதி இரண்டில், 29ம் எண் கேள்வி ஆகியவற்றுக்கு தேர்வர்கள் விடை எழுத முயற்சித்திருந்தால், அதற்கு முழுமையான மதிப்பெண் வழங்க வேண்டும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், ஒன்பதாம் எண் கேள்விக்கு ஒரு மதிப்பெண்; 29ம் எண் கேள்விக்கு மூன்று மதிப்பெண்கள் என, மொத்தம் நான்கு மதிப்பெண்கள் மாணவர்களுக்கு போனசாக கிடைக்கும்.


4 Bonus Marks for plus 2 chemistry


  In the Plus 2 general examination, in the Chemistry question paper, for two questions, four marks are ordered to be given as a bonus. In the Plus 2 general exam, students reported that this year’s chemistry question paper was too difficult.

Some of the questions were difficult and took place outside of the reduced syllabus of Out of Bus. Thus, the average student has difficulty in passing. In this case, the State Examinations Department has ordered the editing teachers to give bonus marks for two questions.

 It states: In the Plus 2 General Examination, in Part One of the Chemistry Question Paper, the ninth question in the A category or the fifth question in the A category; In part two, if the candidates have tried to write the answer to question number 29, they have to give full marks.

 Thus it is said. By this declaration, the ninth number is a mark for the question; As three marks for question number 29, a total of four marks will be given as bonus to the students.

No comments:

Post a Comment