TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றங்கள்
ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும்
பாடப்பிரிவில் திருப்தி அடையாத
மாணாக்கர்கள்,
மேல் நோக்கிய
நகர்தலுக்காக (Upward Movement)
காத்திருக்கலாம் (அல்லது)
கலந்தாய்வில் இருந்து
வெளியேறலாம்தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை
கலந்தாய்வு நான்கு சுற்றுகளில்
நடைபெறும் என்றும், ஒதுக்கப்பட்ட
இடத்தை உறுதி செய்ய பல்வேறு
வாய்ப்புகள் வழங்கப்படும்
என்றும் தமிழ்நாடு பொறியியல்
சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன்
தெரிவித்துள்ளார்.
2022-23 கல்வியாண்டிற்கான
பொறியியல் (B.E/Btech)
பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்
கடந்த மாதம் ஜுலை 26ம் தேதி வரை
பெறப்பட்டது. 207361 விண்ணப்பங்கள்
பதிவேற்றம் செய்யப்பட்டதில் 162492
விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்
கட்டணமும், 149369
விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளில்
கலந்தாய்வின் மூலம் ஒதுக்கீட்டைப்
பெற்ற மாணவர்கள், பின்னர் அதனை
நிராகரித்து விடுவதால் ஏற்படும்
காலியிடங்கள் பிரச்சினையைப்
போக்கும் வகையில் பல்வேறு புதிய
நடைமுறைகள்
அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒதுக்கப்பட்ட கல்லூரி
மற்றும் பாடப்பிரிவுகள் திருப்திகரமாக
இருந்தால், 7 நாட்களுக்குள்
ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர
வேண்டும். மேலும், இந்த குறிப்பிட்ட .
கல்லூரியில் சேராத (அல்லது)
கல்லூரியில் உரிய கட்டணத்தை
செலுத்தாத மாணாக்கர்களின்
ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.
மேலும், அந்த மாணாக்கர்கள் அடுத்த
கலந்தாய்வு சுற்றுகளில் கலந்து
கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோன்று, ஒதுக்கப்பட்ட கல்லூரி
மற்றும் பாடப்பிரிவில் திருப்தி
அடையாத மாணாக்கர்கள், மேல்
நோக்கிய நகர்தலுக்காக (Upward
Movement) காத்திருக்கலாம் (அல்லது)
கலந்தாய்வில் இருந்து
வெளியேறலாம்.இந்நிலையில், பொறியியல்
கலந்தாய்வில் கொண்டுவரப்பட்ட
புதிய நடைமுறைகள் குறித்த பயிற்சி
முகாம், தமிழ்நாடு பொறியியல்
மாணவர் சேர்க்கை செயலாளர்
புருஷோத்தமன்
தலைமையில் சென்னை கிண்டியில்
உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில்
நடைபெற்று வருகிறது. இதில், அரசு மற்றும்
தனியார் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு
பொறியியல் சேர்க்கை உதவி மையப்
பணியாளர்கள் என அனைத்து
பங்குதாரர்களும் கலந்துக் கொண்டனர்.
நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில்,
கலந்தாய்வில் பின்பற்றப்படும் பல்வேறு
கட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, தற்காலிக இடங்களை ஒதுக்கீடு
செய்தல், ஒதுக்கீட்டில் திருப்தி அடையாத
மாணவர்களுக்கான வாய்ப்புகள்,
குறிப்பிட்ட நாட்களுக்குள் கல்லூரியில்
சேர்தல், சேர்க்கை ஆணை வழங்குதல்
உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து
பயிற்சி அளிக்கப்பட்டது.பின்பு, செய்தியார்களிடம் பேசிய
செயலாளர் புருஷோத்தமன், " மிகுந்த
வெளிப்படைத்த தன்மையுடன் கூடிய
வகையில் பொறியியல் சேர்க்கை
நடைபெறும்.
பல்வேறு புதிய நடைமுறைகள்
மேற்கொள்ளப்பட்டன. விதிமுறைகள்
வெளியிடப்பட்டன. குறிப்பிட்ட
நாட்களுக்கும் கல்லூரியில் சேராத
(அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை
செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு
ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள்
காலியாக காட்டப்பட்டு தரவரிசையில்
பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த
இடங்களில் சேர்க்கப்படுவார்கள்" என்று
தெரிவித்தார்.
No comments:
Post a Comment