சருமம் பொலிவு பெற சில யோசனைகள் - 1 - Some ideas for glowing skin - 1 - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, August 29, 2022

சருமம் பொலிவு பெற சில யோசனைகள் - 1 - Some ideas for glowing skin - 1

மாசு, மருவற்ற சருமம், முகத்தை வெண்மை நிறமாக காண்பிப்பது இதுதான் அனைவரின் விருப்பம். முகமும் சருமமும் பொலிவோடு இருக்க, இன்றைக்குப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் புதுப் புது கிரீம்களைப் பூசிக்கொள்வது, பார்லருக்குச் செல்வது, வெயிலுக்கு பயந்து வெளியே செல்லாமல் ஏசியிலேயே கிடப்பது... என நீள்கின்றன அவர்களின் முயற்சிகள். உண்மையில், இவற்றையெல்லாம் பின்பற்றுவதால் மட்டும் நாம் விரும்பும் சருமப் பொலிவு கிடைத்துவிடாது. நம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்க, மினுமினுக்க நாம் பெரிதாக எதையும் மெனக்கெடவேண்டிய அவசியமில்லை. 

அன்றாடம் செய்கிற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும். வெண்மை நிறத்தை பெற √ பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம்  சிகப்பழகு பெறும். √ எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம்  பெறும். √ பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.  சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் தக்காளி போல பளபளக்கும். இயற்கையின் நிறத்தை மாற்ற முடியாது இருந்தாலும் சிறிது நிற மாற்றத்தைப் பெற மேற்கண்டதை முயற்சி செய்யலாம்.   உணவு அழகும் தரும்! செய்யவேண்டியவை சாப்பிடும் உணவு வைட்டமின் சி நிறைந்ததாகவும், தேவையற்ற கொழுப்பு மற்றும் இனிப்பு குறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். 

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும். செய்யக் கூடாதவை ஹோட்டல் மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் வறுத்த காரமான மற்றும் புளித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவை அனைத்தையும் அதிகமாகச் சாப்பிடும்போது சருமம் பொலிவிழந்து போகும்; முதிர்ச்சியான தன்மை சருமத்துக்குக் கிடைக்கும். தூக்கத்தை தொலைக்காதீர்! செய்யவேண்டியவை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். சிவந்த கன்னங்கள் பெறுவதற்கு முகத்துக்கும் உடலுக்கும் சீரான இரத்த ஓட்டம் அவசியம். 

அது ஆழ்ந்த தூக்கத்தில்தான் கிடைக்கும். உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும். இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும். செய்யக் கூடாதவை 24 x 7 டெக்னாலஜியைப் பயன்படுத்துவது கூடாது. இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து, மொபைல் அல்லது டி.வி பார்க்கக் கூடாது. இதனால் கண்களிலுள்ள ஈரப்பதம் குறைந்து தூக்கமும் சீக்கிரம் வராது. அதோடு கண்களைச் சுற்றி கருவளையம் வந்து முகத்தின் அழகையே அது கெடுத்துவிடும் . சூரிய ஒளி காக்கும்! செய்யவேண்டியவை சருமம் தொய்வாக, வறண்டு போய்க் காட்சியளிக்கிறது என்றால், அதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கிடைப்பதைவிட சூரிய ஒளியில்தான் அதிக அளவில் வைட்டமின் டி கிடைக்கும். 

இதனால் வாரத்துக்கு மூன்று நாட்களுக்காவது குறைந்தது 15 நிமிடங்களுக்கு இளம் வெயிலில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். செய்யக் கூடாதவை சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்வது கூடாது. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை அடிக்கும் வெயிலில் அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள் நிறைந்துள்ளன. அதனால், வெளியில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் லோஷனை அப்ளை செய்யாமல் செல்வதைத் தவிர்க்கலாம். குளிர்காலம், மழைக்காலம் என்றால் சன் ஸ்க்ரீன் லோஷனைத் தவிர்ப்பதே நல்லது. தண்ணீர் முக்கியம்! செய்யவேண்டியவை நாள் ஒன்றுக்கு அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். 


நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

Pollution, dull skin, white face is what everyone wants. Many people today follow many ways to keep their face and skin glowing. Their efforts range from applying new creams available in the market, going to the parlour, lying in the air-conditioner without going out for fear of the sun. In fact, following all these alone will not give us the desired skin glow. We don't need to overdo it to make our skin glow naturally.

All you need to do is make a few changes in your daily routine. To get white color √ Soak one teaspoon of poppy seeds in cow's milk at night and rub it on the face in the morning. √ If you mix lime juice with lime juice and apply it on your face and wash it off after an hour, your face will get a fair complexion. √ Mix a few drops of lemon juice in milk and apply on the face after bathing and wash off after drying. If you do this continuously for a few days, your face will glow like a tomato. Although you cannot change the natural color but you can try the above to get some color change. Food is also beautiful! Dos and Don'ts The food you eat should be rich in vitamin C and low in unnecessary fats and sweets. Avoid white sugar. Instead, you can add ginger, black pepper and honey.

By eating foods rich in fiber like fruits, vegetables and greens, the body gets rid of toxins and unwanted fats. The skin is also radiant. Don'ts Avoid eating at hotels and fast food. Avoid eating junk food, spicy and fermented foods fried in oil. Eating too much of all these will make the skin pale; Maturity comes to the skin. Don't lose sleep! Dos and Don'ts It is essential to sleep eight hours a day. A balanced blood flow to the face and body is essential to get rosy cheeks.

It is obtained only in deep sleep. Collagen is produced in the skin only when you sleep. It removes dead skin cells and promotes new cell growth. Don'ts Don't use technology 24 x 7. Do not stay awake for a long time at night, watch mobile or TV. Due to this, the moisture in the eyes decreases and sleep does not come quickly. In addition, dark circles appear around the eyes and spoil the beauty of the face. Sun protection! What to do If the skin looks flabby and dry, it may be due to vitamin D deficiency. Morning and evening sunlight is rich in vitamin D. We get more vitamin D from sunlight than from the food we eat.

So make it a habit to stand in the sun for at least 15 minutes at least three days a week. Don'ts Don't go outside without sunscreen. The sun that shines between 10 am and 3 pm is full of excess UV rays. So, you can avoid going outside without applying sunscreen lotion. It is better to avoid sun screen lotion in winter and rainy season. Water is important! What should be done is to drink water as per your physical activity per day. Drink at least two liters of water.


Eat fruits and vegetables that are high in water content such as watermelon, tomatoes, cucumbers, oranges, and grapes. After waking up in the morning, dip a cotton ball in paneer and apply it on your face. Due to this, the blockages in the skin will be removed and your face will be refreshed throughout the day.

No comments:

Post a Comment