சருமம் பொலிவு பெற சில யோசனைகள் - 2 Some ideas to get glowing skin - 2 - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, August 29, 2022

சருமம் பொலிவு பெற சில யோசனைகள் - 2 Some ideas to get glowing skin - 2

சருமம் பொலிவு பெற சில யோசனைகள் - 2 Some ideas to get glowing skin - 2 தண்ணீர் முக்கியம்! - தொடர்ச்சி... 

 செய்யக் கூடாதவை வெறும் வயிற்றில் காபி குடிக்கக் கூடாது. இது உடலின் நீர்த்தன்மையை குறைக்கும்; உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவிடாமல் தடுக்கும். அதனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து டீ அல்லது காபி குடிக்கலாம். பருக்கள்... கவனம்! செய்யவேண்டியவை ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரால் மூன்று முறையாவது முகத்தைக் கழுவ வேண்டும். முகப்பருக்கள் அதிகமாக இருக்கும்போது, இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

அது, பருக்களுக்குத் தீனி போடுவது போன்றது. க்ரீம்களைப் பூசுவதற்குப் பதிலாக சந்தனம், முல்தானிமட்டி, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலைப் பொடி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்தாலே போதுமானது. செய்யக் கூடாதவை பருக்களைக் கிள்ளுவது கூடாது. இதனால் மேலும் பருக்கள் படரும். 

பருக்கள் வரும்போது கைகளை முகத்தில் அதிகமாக வைக்கக் கூடாது. அரிப்பு எடுத்தால், பன்னீரில் நனைத்த அல்லது கிரீன் டீயில் நனைத்த பஞ்சை பருக்களின் மீது வைக்கலாம். கூலிங் கிளாஸ் அல்லது கண்ணாடி போடும் வழக்கம் இருந்தால், அதை அடிக்கடித் துடைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், அதில் இருக்கும் தூசி முகத்தில் படிந்து அதனாலும் பருக்கள் உருவாகலாம். 

 உடற்பயிற்சி நன்மை தரும்! செய்யவேண்டியவை சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அதற்கு அவசியத் தேவை உடற்பயிற்சி. இதனால் ஆக்சிஜனின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். தோலிலுள்ள செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். மனஅழுத்தம் குறையும். ஜாகிங், வாக்கிங், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்வதால், சருமத்தில் உள்ள துவாரங்கள் திறந்து, வியர்வை வெளியேறி, இயற்கையான அழகைப் பெற வழி கிடைக்கும்.  செய்யக் கூடாதவை கண்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வது கூடாது. காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சி செய்யலாம். 

அதனால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பல பலன்கள் கிடைக்கும். அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது நம் வாழ்வியல் முறையையே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீண்ட நேரம் கேமரா முன் ஃப்ரெஷாக இருக்க விரும்புபவர்கள் ஜாகிங் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். சருமம் என்றால் முகம் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆறு விஷயங்களைக் கடைபிடியுங்கள். அழகும் ஆரோக்கியமும் இனி உங்கள் வசம்! அழகின் நிறம் சிவப்பு தான் என்று, எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று, பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Some ideas to get glowing skin - 2 Some ideas to get glowing skin - 2 Water is important! - Continued...

 Don'ts Don't drink coffee on an empty stomach. It reduces the water content of the body; Prevents the body from excreting toxins. So drink a glass of warm water on an empty stomach in the morning and drink tea or coffee after half an hour. Pimples... ATTENTION! Dos Wash your face at least three times a day with warm water. When you have acne breakouts, you should avoid eating too many sweets.

It's like feeding pimples. Instead of applying creams, take one teaspoon each of sandalwood, multanimati, musk turmeric, neem powder and lemon juice and apply it on your face and wash your face after 15 minutes. Doing this once a week is enough. Don'ts Do not pinch pimples. This will cause more pimples.

Do not put your hands too much on your face when you get pimples. If itchy, you can place a cotton pad soaked in paneer water or green tea on the pimples. If you have a cooling glass or glass in the habit, it should be cleaned and used frequently. This is because the dust in it gets deposited on the face and can cause pimples.

 Exercise is beneficial! Do you want healthy skin? It requires exercise. This increases the amount of oxygen in the blood. Skin cells are rejuvenated. Reduces stress. By doing exercises like jogging, walking, yoga, the pores in the skin are opened, the perspiration is released and there is a way to get natural beauty. Don't do exercise when you see it. Exercise can be done in the morning or evening.

So not only the body but also the mind will get many benefits. Exercising early in the morning can help keep our lifestyle healthy. Those who want to stay fresh in front of the camera for long periods of time can benefit from jogging. Skin should not mean that only the face should be beautiful. Follow these six things to stay beautiful and healthy from head to toe. Beauty and health are now at your disposal! No science has ever said that red is the color of beauty. But many scientific studies suggest that black is a healthy color.

No comments:

Post a Comment