கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பலன்கள் !! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, August 12, 2022

கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பலன்கள் !!

கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பலன்கள் !! 

முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவேண்டும். கொத்தமல்லி விதைகளை தொடர்ந்து அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் வெகுவாக குறைந்திருப்பதை பல மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். 
தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது. 
கொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம். கொத்தமல்லி இதய நோய்க்கு காரணமான உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவற்றை குறை

க்கிறது. கொத்தமல்லி டையூரிடிக் என்பதால், உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. 

இதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. தனியாவில் அத்தியாவசிய எண்ணெய்கள், பாக்டீரியா வைரஸ் எதிர்ப்பு வேதிப்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள், நச்சுத்தன்மையை நீக்குகின்ற அமிலங்கள், மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன.

No comments:

Post a Comment