எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க எந்த பழத்தை ஊற வச்சி சாப்பிடனும் தெரியுமா ? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, August 9, 2022

எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க எந்த பழத்தை ஊற வச்சி சாப்பிடனும் தெரியுமா ?

எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க எந்த பழத்தை ஊற வச்சி சாப்பிடனும் தெரியுமா ? 

 அத்திப்பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் ஒரு பழம் . இதை அப்படியேவும் சாப்பிடலாம் தண்ணீரில் ஊரவச்சும் சாப்பிடலாம் . ஊற வச்சி சாப்பிடுவதில் நம் உடல் அதிலிருக்கும் சத்துக்களை உறிஞ்சி எடுத்து நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது தினமும் இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் . பின்னர் மறுநாள் காலையில் அதை எடுத்து ,அந்த தண்ணீருடன் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. 

 கால்சியம் சத்துக்கள் நமக்கு இந்த ஊற வச்ச பழம் மூலம் ஏராளமாய் கிடைப்பதால் நமக்கு எலும்பு தொடர்பான நோய்கள் ஜென்மத்துக்கும் வராது . இந்த அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்,பெண்களுக்கு வர கூடிய மார்பக புற்று நோய் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளை அழித்து ,கேன்சரிலிருந்து நம்மை காக்கும் . 

 உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும். அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு ,தொண்டையில் ஏற்படும் புண்ணையும் குணப்டுத்தி ,ஆஸ்த்மாவுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது இதில் வைட்டமின் ஏ உள்ளதால் முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுத்து ,நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவையும் அதிகரிக்காமல் கட்டுபடுத்தும்.

No comments:

Post a Comment