மாதுளம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?
தேவையானவை
மாதுளம் பழம் - 1,
சர்க்கரை - 100 கிராம்,
தேன் - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்.
செய்முறை
மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.
இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம்.
தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்
No comments:
Post a Comment